நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியமில்லை: ‘கருப்பு’ பட வழக்கில் நீதிபதிகள் உத்தரவு
admin - 0
‘நீதித் துறையில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடியாது; அதேபோல நீதிபதிகளை புனிதர்களாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்று கருப்பு படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
‘நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நீதித் துறையையும், நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால் அப்படத்துக்கு தடை...
சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து: டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்
admin - 0
டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் நேற்று சென்னை திரும்பினார். முன்னதாக திட்டமிடப்பட்ட சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதால் அரசியலில் அது பெரும்விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார். இப்படியான அரசியல்...
செல்போனை ஒதுக்கிவிட்டு புத்தகங்களை வாசிக்க வேண்டும்: இளைஞர்களுக்கு கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தல்
admin - 0
இளைஞர்கள் செல்போனை ஒதுக்கி வைத்துவிட்டு புத்தகங்களை வாசிக்க தொடங்க வேண்டும் என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தினார்.
மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் மற்றும் கொன்ராட் அதெனாவர் அறக்கட்டளை சார்பில் வங்கியாளரும், பிரபல எழுத்தாளருமான ஷியாம் னிவாசன் எழுதிய ‘பெட்டர் நெவர் ஸ்டாப்ஸ்’ புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், புத்தகத்தை வெளியிட்டார்....
கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் 360 சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடைவெப்பம் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனால் அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர்...
“இனி வரும் தேர்தல்களில் தனி சின்னத்திலேயே போட்டியிடுவோம்” என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, தனி சின்னத்தில் வென்ற முஸ்லிம் லீக் கட்சிக்கு தவெக அரசில் அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால் மமக இந்த முடிவுக்கு வந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை மறுத்த ஜவாஹிருல்லா, “பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியானது தனி சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே அதன் பதிவை தக்கவைத்துக் கொள்ள முடியும்...
அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை பக்ரீத் திருநாள் அளிக்கட்டும்: தலைவர்கள் வாழ்த்து
admin - 0
பக்ரீத் பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் என்று ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி வருமாறு:
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்: இந்த தியாக திருநாள் பகிர்வு, பரிவு, ஒற்றுமை மற்றும் சமரசம் ஆகிய மனப்பான்மைகளை ஏற்கத் தூண்டி, நமது பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தை ஒன்றிணைத்து வைத்திருக்கும்...
தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத்தாண்டி பொது இடங்களில் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளரான கோவை மாவட்டம் செல்வபுரத்தைச் சேர்ந்த கே. சூர்ய பிரசாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், `பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்தாண்டு கோவை செல்வபுரத்தில் மாடுகள் வெட்ட தனியாக தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக புகார் அளித்ததால்...
திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீஸார் வன்கொடுமை செய்த வழக்கை வரும் ஜூலைக்குள் விசாரி்த்து முடிக்க வேண்டுமென மகளிர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தனது வளர்ப்புத் தாயார் மற்றும் மாமாவுடன் சரக்கு வாகனத்தில் திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த 26 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை கிழக்கு...
பயிர்க் கடனை ஏன் முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது? – நபார்டு நிபந்தனை தெரியாமல் தலையைக் கொடுத்த தவெக அரசு
admin - 0
தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது தவெக அரசு. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி விஜய் செய்யவில்லையே என விவசாயிகளும் விவசாய சங்கங்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றன.
பயிர்க் கடன் தள்ளுபடி என்பது திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் ஓட்டுக்காக விவசாயிகளை வளைக்கும் ஒரு உத்தி. அதேசமயம், இந்த ‘தள்ளுபடி’ விவகாரத்துக்கு நீண்ட நெடிய வரலாறே இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் வழங்கும்...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில், அவரது இல்லத்துக்கு, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்து வழங்கினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு, முதலாவதாக ஆண் குழந்தை இருக்கும் நிலையில், அவர்களுக்கு இரண்டாவதாக, பெண் குழந்தை கடந்த 22-ம் தேதி பிறந்தது. இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு நாதஸ்வரம், மேள தாளங்கள்...










