ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் மொபிஸ் கார் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் எரிந்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் ஹூண்டாய் மொபிஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கார்களுக்கான டேஷ்போர்டு, ஏர்பேக் தயாரிக்கும் பிரிவில் நேற்று திடீரென தீப்பற்றியது.
அப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்,...
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தமிழகத்துக்கு அநீதி: அன்புமணி கண்டனம்
admin - 0
தமிழக அரசு 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கக்கூடாது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வில் தவெக அரசு மேல்முறையீடு செய்ய பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை...
தமிழக முதல்வர் விஜய் நாளை (திங்கள் கிழமை) திருச்சி கிழக்கு தொகுதிக்கு நன்றி தெரிவிக்க வரும் நிகழ்ச்சியில் கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழக முதல்வர் விஜய் கலந்துகொள்ளும்,...
“இப்போது அமைச்சர் பதவிக்கு எல்லோரும் ஓடுகிறார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய்யே வீடு தேடிவந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இதுதான் உண்மை” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, “இந்த தேர்தலில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் விரும்பிய கூட்டணியை அமைத்தோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல், ஒரு மாயையை உருவாக்கி ஒரு சுனாமி போல...
திருப்பரங்குன்றத்தில் மூடப்பட்ட 3 மதுக்கடைகளில் காவல் நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் கடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. தவெக பிரமுகரின் பாரையொட்டி உள்ள இந்த டாஸ்மாக் கடை விதிமுறையை மீறி திறக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
தவெக அரசு அமைந்தவுடன் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 அரசு மதுபானக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார்....
காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
admin - 0
‘அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனக்கோடி நடுநிலைப்பள்ளியில் 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் இதுவரை அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 625 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். புதிதாக 4 லட்சம்...
தமிழக அரசின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், துணிநூல் மற்றும் காதித்துறையின் செயலர் வி.அமுதவல்லி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பட்டுவளர்ப்புத் துறை பணியிடங்களுக்கு சிறப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, பட்டுவளர்ப்பு உதவி இயக்குநர் நேரடி நியமனத்துக்கு எம்எஸ்சி விவசாயம் (பட்டு வளர்ப்பு) பட்டம் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல், பட்டு வளர்ப்பு உதவி ஆய்வாளர் பதவிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பிஎஸ்சி பட்டு வளர்ப்பு பட்டம் ஆகும்.
பட்டு வளர்ப்பு இளநிலை ஆய்வாளர்...
தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் இன்னொரு நடிகரின் கட்சியான தவெக. “கணிசமான அதிமுக தொண்டர்களும் தவெக-வில் இணையத் தயாராகி விட்டார்கள். இன்னும் 6 மாதத்தில் ஒட்டுமொத்த அதிமுக முக்கிய நிர்வாகிகளும் தவெக-வில் இணைவார்கள்” என்று அடித்துச் சொல்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
தேர்தலுக்கு முன்பே கூட்டணி...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 6 மாதங்களுக்குள் அறங்காவலர்கள் நியமனம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
admin - 0
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 47 ஆண்டுகளாக கோயில் செயல் அலுவலரே தக்காராக நியமிக்கப்பட்டு வருவதால், அரசு அதிகாரியாக உள்ள செயல் அலுவலரை தக்காராக நியமிக்க கோரி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, செயல் அலுவலர்கள் கோயிலின் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
மத நடவடிக்கைகளில் தலையிட...
ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் உயிரிழப்பு; புகையிலை பழக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும்: மருத்துவர் நரசிம்மன் வலியுறுத்தல்
admin - 0
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் புகையிலையால் உயிரிழக்கின்றனர், இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நுரையீரல் நிபுணர் மருத்துவர் நரசிம்மன் கூறியதாவது: உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே-31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இளைஞர்களை புகையிலை மற்றும் நிக்கோட்டின் பழக்கத்திலிருந்து பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புகையிலை நேரடியாக உட்கொள்வது மூலமாகவும், 16 லட்சம் பேர்...










