சென்னை: பாஜகவில் 27 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை தி.நகர் கமலாலயத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழிசை, மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவத்தி, கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழிசை கூறியதாவது: பாஜகவில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அவர்களுக்கென்று சில உறுப்பினர்களை சேர்த்து, கட்சிக்கு...
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசியது: தமிழகம் முழுவதும் 234 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க இருக்கிறோம். இவர்களோடு சேர்த்து மாவட்ட நிர்வாகமும் முழுமையாக அறிவிக்கப்பட இருக்கிறது. மாவட்ட நிர்வாக பொறுப்புகளை ஆய்வு செய்து தலைமைக்கு பரிந்துரை செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட இருக்கிறது. இந்தக்குழு ஆய்வு செய்து ஒவ்வொரு பொறுப்புக்கும் மூன்று பெயர் களை தலைமைக்கு பரிந்துரை செய்யும்....
வெளியூரில் தங்கியுள்ள மக்கள்தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக வழக்கம்போல அரசு சார்பில் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 4,900 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
எனினும், சொகுசு வசதிகள் காரணமாக சிலர் தனியார் பேருந்துகளை நாடுகின்றனர். குறிப்பாக விரைவு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த இருக்கை,படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் முன்பதிவு நிறைவடைந்த நிலையில், வெகுதூரம் பயணிக்கவேண்டியவர்கள் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளில்...
உயர் நீதிமன்ற உத்தரவின்படி வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்
admin - 0
கடலூர்: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வடலூர் வள்ளலார் சர்வதேச மையகட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின.
வடலூரில் உள்ள அருட்பிரகாச வள்ளலாரின் சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் விமர்சையாக நடைபெறும். இந்நிலையில், வடலூர் பெருவெளியில் ரூ.99.90 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் தொடங்கின.
ஆனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சர்வதேச மையம் அமைக்கப்படுவதாக புகார்தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அங்குள்ள...
காஞ்சிபுரம் | ரூ.4 கோடி சொத்து சேர்த்த வழக்கு: திமுக பெண் கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
admin - 0
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் குஜராஜ்(45). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட படப்பை பிரிவில் நீர்வளத் துறைஉதவி பொறியாளராக ஏற்கெனவே பணியாற்றியவர். தற்போது கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட செங்கல்பட்டு பிரிவில் பணி செய்து வருகிறார்.
இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் தமிழரசி(77), சகோதரிராஜேஸ்வரி(58). தனது சகோதரிராஜேஸ்வரின் மகள் ராஜலட்சுமியை (38)திருமணம் செய்துள்ளார். ராஜலட்சுமி கடந்த 2021-ம்ஆண்டு வாலாஜாபாத் ஒன்றியத்தில் கவுன்சிலர் (திமுக)...
நீலக்கொடி கடற்கரை திட்டத்தில், மெரினா கடற்கரையில் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், நூற்றாண்டுகள் பழமையான சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட்டை நவீனப்படுத்தவும் சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களை கோரியுள்ளது.
சர்வதேச தரத்தைப் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் கோவளம் கடற்கரை மட்டுமே இந்த சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடற்கரைகளை மேம்படுத்தும் வகையில், ரூ.1,675 கோடியில் கடலோர மேம்பாட்டுத் திட்டம் உலக வங்கி நிதியில் செயல்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக,...
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம்தேதி இரவு 8.30 மணி அளவில் பாக்மதி விரைவு ரயில்விபத்துக்கு உள்ளானது. இதில், அந்த ரயிலின் 12பெட்டிகள் வரை தடம் புரண்டன. 19 பேர் காயமடைந்தனர்.
ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய அதிகாரிமுனி பிரசாத் பாபு அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன்...
மக்களவை தேர்தலில் திமுக செல்வாக்கு உயர்ந்துள்ளது: எதிர்க்கட்சி தலைவரின் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
admin - 0
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் ச.உமா வரவேற்றார். விழாவுக்கு, தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம். கடந்த சில நாட்களாக 3 ஆண்டுகள் அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகளின் நிலை குறித்து...
தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில், புதியகலைச்சொற்களை உருவாக்கி அவற்றை இணைய வழியில் அறிமுகப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நாமக்கல் கவிஞரின் கொள்ளுப்பேத்தியும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநருமான இரா. மனோன்மணி பேசியதாவது: தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டைக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறார்கள்.
எதிர்காலத்தில்...
பாஸ்போர்ட் பெற பொதுமக்கள் தங்கள் வீட்டருகே உள்ள பொதுசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சலகங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அதன் பின்னர்,...










