Google search engine
அரசு பேருந்துகளில் கடந்த மாதம் முன்பதிவு செய்து பயணம் செய்த 3 பயணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும் பரிசு வழங்கப்படவுள்ளது. இதற்காக கணினி குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொலைதூர பேருந்துகளில் https://www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை உள்ளது. இந்நிலையில் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர...
தமிழ் குறித்து திமுக அரசுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில், ‘‘தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவ தமிழக அரசு அமைக்கும் உதவி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்...
சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. குரங்கம்மை பாதிப்புள்ள 116 நாடுகளில் இருந்து வந்தவர்கள், அந்நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் குரங்கம்மை தொற்றுநோய் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு நாளை (நவ.5) வருகிறார். மாவட்டம் வாரியாக ஆய்வுப் பணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், முதல்கட்ட ஆய்வுப் பணியை கோவையில் நாளை தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை கோவை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து டைடல் பார்க் வளாகத்துக்குச் செல்லும் அவர், அங்கு 8 தளங்களுடன், 2 லட்சத்து 94,000...
 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மொத்த ஜவுளிப் பொருட்கள் விற்பனையில் பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. எதிர்காலத்தில் பருத்தி பயன்பாடு முற்றிலும் குறைவதற்கான அறிகுறி இது என்று தொழில் துறையினர் தெரிவித்தனர். பருத்தியை மூலப் பொருளாகக் கொண்டு செயல்படும் இந்திய ஜவுளிச் சங்கிலித் தொடரில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பருத்தி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்களைவிட, செயற்கை இழை கலந்து தயாரிக்கப்படும் ஜவுளிப்...
தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஓய்வூதியதாரர்களுக்காக டிஜிட்டல் முறையில் வாழ்நாள் அடையாளச் சான்றிதழ் காணும் முகாம் மத்திய அரசினால் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நவ.1 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் அடையாளச் சான்றிதழ் காணவும் அவர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்கவும் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர்...
மத்திய, மாநில அரசுகள் மற்றும் ராணுவ ஓய்வூதியர்கள் உள்ளிட்டோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வசதியாக அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வீட்டில் இருந்தபடியும் இந்த சேவையை பெறலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசுகள், ராணுவம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற, ஆண்டுதோறும்...
சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் தேர்வு, வரிகளை உயர்த்தியது, போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கை பரப்பு இணை செயலாளர் தாகிரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில்...
 தவெகவின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய்யின் பேச்சு மற்றும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதிலும், நேரடியாக பதிலளிக்காமல் நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளை உன்னிப்பாக திமுக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக, அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகி வருகிறது. அடுத்து வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளை இலக்காக வைத்து களம் காண, முதல்வர்...
விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய்யின் கொள்கை குறித்து நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: தவெக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாபம் விடுகிறார். விஜயும், திமுகவும் கொள்கை ரீதியாகவே தவறு செய்துள்ளதாக சீமான் கூறுகிறார். அப்படி கொள்கை ரீதியாக தவறு...