தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம் இன்று தொடக்கம்

0
53

தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஓய்வூதியதாரர்களுக்காக டிஜிட்டல் முறையில் வாழ்நாள் அடையாளச் சான்றிதழ் காணும் முகாம் மத்திய அரசினால் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நவ.1 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் அடையாளச் சான்றிதழ் காணவும் அவர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்கவும் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ‘ஸ்பர்ஷ்’ (SPARSH) என்ற ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் நவம்பர் மாதத்தில் நடத்தப்படுகிறது. இதன்படி, சென்னையில் இன்றும் (4-ம் தேதி), 6-ம் தேதி கிருஷ்ணகிரியிலும், 11-ம் தேதி திருப்பூரிலும், 14-ம் தேதி தஞ்சாவூரிலும், 21-ம் தேதி மதுரையிலும், 26-ம் தேதி கோயம்புத்தூரிலும், 29-ம் தேதி ஆவடியிலும் நடைபெறுகிறது.

மேற்கண்ட ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம்களில் முப்படை ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்நாள் அடையாளச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் காணவும் மற்றும் பிற ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காணப்படும் என, சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here