Google search engine
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள்பட்ட தீக்காயங்களை விரைவாககுணப்படுத்த உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை அளிக்கப் படுகிறது. நோயாளிகள் டிவி பார்த்து கொண்டே சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் தீ விபத்தால் ஏற்படும் காயங்களை குணப்படுத்த சிறப்பு தீக்காய பிரிவு மற்றும் அதிநவீன உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன. நீண்ட நாட்களாக குணமாகாமல் இருக்கும் காயங்களை சரி செய்ய நோயாளிகளுக்கு உயர் அழுத்த...
மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு வரும் 13-ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளது. இது குறித்து இந்தக் குழுவின் துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.மோகன்தாஸ் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு,...
மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள சிறிய மருத்துவமனைகளில் 24 மணி நேர சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர். இதுதொடர்பாக சென்னையில் அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எங்களது நீண்டநாள் கோரிக்கையான அரசாணை 354-ஐ மறுஆய்வு செய்து ஊதியம் மற்றும் பணி உயர்வு வழங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசாணை 293-ஐ மாற்றம்...
சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், தடா - சூலூர்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு நவ. 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு நவ. 7, 9, 12 ஆகிய...
அணைகள் மற்றும் ஏரிகளில் மதகுகள் பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நீர்வளத் துறையின் அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சிறப்பு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது அப்போது, அமைச்சர் பேசும்போது, “தமிழ்நாடு முழுவதும் நீர்வளத் துறையின்...
பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நிவாரணத்தைப் பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய இக்கட்டான நிலை உள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக்கூறி ரூ. 13.66 லட்சம் வசூலித்து ஏமாற்றியதாக வேலூரைச் சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயசிங் வசந்த் ரஞ்சித் என்பவருக்கு எதிராக கோயம்பேடு போலீஸில் புகார் அளித்திருந்தார். தனது புகார்...
சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருச்சி சூர்யா போலீஸ் பாதுகாப்பு கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த சூர்யா. இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருச்சியில் குடும்பத்துடன் வசிக்கிறேன். எனது தந்தை திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். நான் பாஜக.வில் ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக இருந்தேன்....
எண்ணூர் மற்றும் உப்பூர் அனல்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை பொது, தனியார் கூட்டு முயற்சியில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் மின்வாரியம் ஆலோசனை கேட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் 660 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால், வேறொரு நிறுவனத்திடம்...
மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவி வரும் சூழலில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை (நவ. 7) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல,...
பள்ளி ஆய்வு பணியில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 25-ம் தேதி வகுப்பறையில் வாயு பரவி 39 மாணவிகள் மயக்கம் அடைந்த பரபரப்பு அடங்குவதற்குள் அப்பள்ளியில் நேற்று மீண்டும் 4 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். முதல் சம்பவம் நடந்தபோது தமிழ்நாடு மாசு...