Google search engine
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 7 புறப்பாடு, 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கொச்சி செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10.50 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமுகா செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ்...
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, டெல்டா, கடலோர மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி,...
தமிழகத்தில் வரும் ஆண்டில் ஆயிரம் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீராதாரத்தை மேம்படுத்த தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அணை கட்ட முடியாத நிலையில் தடுப்பணை கட்டுவதன்...
இந்து சமய அறநிலையத் துறை​யில் நடத்​தப்​பட்ட தணிக்கைக்கு, அந்த துறை ஒத்துழைப்பு வழங்​க​வில்லை என்று தணிக்கைத் துறை அறிக்கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்பாக தமிழ்​நாடு மாநில முதன்மை கணக்​காயர்கள் ஜெய்​சங்கர் (தணிக்கை-1), ஆனந்த் (தணிக்கை-2) ஆகியோர் சென்னை​யில் செய்தியாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் சூரியசக்​தி​யுடன் கூடிய பசுமை வீடு திட்​டத்​தின் கீழ் தேர்வு செய்​யப்​பட்ட கிராமங்​களைச் சேர்ந்த ஊரக நலிவுற்​றோரில் 7.42 சதவீதம் பேர் மட்டுமே பயனடைந்​திருப்​ப​தால், பாதிப்புற்ற ஊரக...
பாரதியாரின் பிறந்தநாள் விழா கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் நாளை (டிச.11) கொண்டாடப்பட உள்ளது. இதனுடன் தேசிய மொழிகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் நடத்தப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கான தலைப்பாக ‘வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்’...
கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு...
‘அமெரிக்காவில் இருக்கும் அதானி வழக்குக்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி சந்திக்கவில்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை' என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் விவாதம் நடைபெற்றது. ஜி.கே.மணி (பாமக): அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடம் இருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதில் முறை கேடு நடந்துள்ளதாக தமிழகத்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது....
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா (93) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய அரசியலில் உறுதியும் தொலைநோக்கும் மிகுந்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். கர்நாடகத்தின் முதல்வராக கிருஷ்ணா, அம்மாநிலத்தைக் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சிப் பாதையில் செலுத்தினார்....
தமிழகத்தில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் நேற்று தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதாவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கனிமவளம் கொண்ட நிலங்களும், அரசியல் சாசனத்தின் 7-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள்...
முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சூழலை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசும்போது, “முல்லை பெரியார் அணையில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் முல்லை பெரியார் அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு...