மேயர் – எம்எல்ஏ இடையே ‘மெழுகுவர்த்தி’ சர்ச்சை: பள்ளி கட்டிட திறப்பு விழாக்களில் அடுத்தடுத்து பரபரப்பு
admin - 0
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பள்ளி கட்டிடத் திறப்பு விழாக்களில், மேயர் ஆர்.பிரியா மற்றும் திருவிக நகர் எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வெளிப்படையான மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி, திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் மேயர் ஆர்.பிரியா, திருவிக நகர் எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி மற்றும் கல்வித்துறை இணை...
விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று தனது பணியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் விருப்பம். முதல்வரைச் சந்தித்து விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை வைப்பேன்.
‘மதுக்கடையை மூடிவிட்டோம்’ என்றார்கள். ‘விருத்தாசலத்தில் ஒரு கடையும் மூடப்படவில்லை’ என மக்கள் தெரிவிக்கின்றனர். எல்லாம் கண்துடைப்பாக உள்ளது.
பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர்....
குர்பானி கொடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஐயூஎம்எல் வலியுறுத்தல்
admin - 0
குர்பானி கொடுக்க கட்டுப்பாடுகள் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று, முதல்வரிடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், எம்.பி. கே.நவாஸ்கனி, மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் உள்ளிட்ட நிர்வாகிகள்,...
ஜூன் 8-ம் தேதி டெல்லியில் கூடும் இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்திருக்கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்தால் மனக்காயமுற்றிருக்கும் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருக்கும் திமுக, காங்கிரஸ் பங்கேற்கும் எந்தக் கூட்டத்திலும் இனி பங்கேற்கமாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறது.
திமுக-வின் இந்த முடிவு ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். அதேசமயம் இந்த விஷயத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை சத்தமில்லாமல் அடித்துச் சாய்த்துவிட்ட திருப்தியில் இருக்கிறது...
“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்; ஆனால் திமுக எங்கள் மீது பழிபோடுகிறது” – நாராயணசாமி
admin - 0
“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு சாதாரண தொண்டன் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாகியிருக்கிறது. திமுக எங்கள் மீது பழிப்போடுகிறது" என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று (ஜூன் 4) இரவு பழநிக்கு வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு பழநி அடிவாரத்தில்...
வார கடைசி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 885 பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முகூர்த்த தினமான இன்று (4-ம் தேதி) மற்றும் வார கடைசி நாட்களை முன்னிட்டு (5, 6, 7 தேதிகள்) சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும்...
தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்ணாமலை தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பது பரபரப்புச் செய்தியாக இருக்கும் நிலையில், “அவர் தனிக்கட்சி முடிவில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்போது அவர் அறிவிக்கப் போவதில்லை. புதன் மாலை 7 மணி வரைக்கும் டெல்லியிலிருந்து சென்னை திரும்புவதற்கு அண்ணாமலை ரிட்டர்ன் டிக்கெட் எடுக்கவில்லை. அதனால் இன்று அவர் சென்னை வருவதே சந்தேகம் தான்” என்று உறுதிபடச் சொல்கிறார்கள்...
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்துக்கு பிரத்யேக இணையதளம்: அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்
admin - 0
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்துக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் கடந்த 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது சென்னை அம்பத்தூரில் இயங்கி வருகிறது. இங்கு தொழிலாளர் மேலாண்மையில் பிஏ, எம்ஏ மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 2001 முதல் முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி) மேற்கொள்வதற்கான ஆராய்ச்சி நிலையமாகவும்...
எஸ்.ஜே.சூர்யாவின் புதிய படத்தின் படப்பிடிப்பின் போது, சிலிண்டர் வெடித்து தொழில்நுட்ப கலைஞர் உயிரிழந்தார். திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, 10 வருடங்களுக்கு முன்பு ‘இசை’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அதற்கு பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது, அவர் ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இதில், ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார்.
ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஏஞ்சல் ஸ்டுடியோஸ்...
“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்” – முதல்வர் விஜய் வாழ்த்து
admin - 0
“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்” என்று மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று (ஜூன் 4) திறக்கப்பட்டன. தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடத்தப்பட்டது.
இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் வழக்கத்தைவிட முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம்...










