பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமாகா தலைவர் வாசன் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் தெளிவான விளக்கம் இல்லை. பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மின் கட்டண
உயர்வு இல்லை என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மின்வெட்டு இல்லாத சூழலை உறுதி செய்வது அரசின் பொறுப்பாகும். சட்டம், ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வருகிறது.
தமாகா தனது அடித்தளத்தை...
தமிழர் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் இ.சுந்தரமூர்த்தி: நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் புகழாரம்
admin - 0
தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி என்று, சென்னையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, சென்னையில் கடந்த மே 13-ம் தேதி காலமானார். இந்நிலையில், தமிழியக்கம், டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம், சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், அவருக்கு நினைவேந்தல் நெகிழ்வு நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரம், தமிழ் இணையக்கல்விக்...
முதல்வர் விஜய்யுடன் எச்டி ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு – தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டுமான திட்டம்
admin - 0
தூத்துக்குடியில் ரூ.38ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய்யுடன், எச்டி கேஎஸ்ஓஇ நிறுவன அலுவலர்கள் சந்தித்தனர்.
தென் கொரியாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனம் எச்டி ஹுண்டாய். இந்நிறுவனம் தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய...
தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
மேலும், ‘தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி’, ‘ரீல்ஸ் இங்கே, ரியல் எங்கே?’, ‘தூய சக்தி அல்ல துயர சக்தி’ என்று தவெக ஆட்சிக்கு வந்ததை விமர்சித்தும், ‘கதறல் கேட்கவில்லையா சிஎம்?’ என்று தமிழகத்தில் நிகழும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி...
தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை, நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டார். அதில், அரசின் கடன் ரூ.13 லட்சம் கோடியாக உள்ளது. ஒவ்வொரு தனி நபர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் சுமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற விஜய்,...
கூடங்குளம் அணுமின் நிலைய 5-வது அலகில் வெற்றிகரமாக 320 டன் அணு உலை அழுத்த கலன் நிறுவப்பட்டது
admin - 0
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5-வது அலகில், 320 டன் அணு உலை அழுத்தகலன் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில், ரஷ்யாவின் பங்களிப்புடன் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அணுமின் திட்டத்தின் 5-வது அலகில், அணு உலை கட்டிடத்துக்குள் ‘அணு உலை அழுத்தக்கலன்’ (reactor pressure vessel) வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக, இந்திய அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் அக்கழகம் வெளியிட்ட பதிவு: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5-வது...
‘கூட்டணி கட்சிகள் மீது பழி சுமத்தி, விமர்சித்துக் கொண்டே இருந்தால் திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்படும்’ என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள தவெக தலைவர் விஜய் முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் தீர்ப்பு.
மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும்...
பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.8 லட்சம் நிவாரண நிதி: அமைச்சர் குமார் வழங்கினார்
admin - 0
கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 3 வயது பெண் குழந்தையின் குடும்பத்துக்கு அரசு சார்பில், ரூ.8 லட்சம் நிவாரண நிதிக்கான ஆணையை நேற்று செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் குமார் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையையொட்டியுள்ள புதுப்பேட்டை பகுதியில் கடந்த 14-ம் தேதி மாலை, வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த பிஹார் மாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை திடீரென...
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அனுப்பினார்
admin - 0
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை சுட்டிக்காட்டி, ‘ரூ.258 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலாமாகியுள்ளது’ என திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில்...
2031-க்குள் தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: பணிபுரிவோரின் எண்ணிக்கை குறையும் என வெள்ளை அறிக்கையில் தகவல்
admin - 0
தமிழகத்தில் 2031-ம் ஆண்டுக்குள் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, பணிபுரிவோரின் எண்ணிக்கை குறையும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த வெள்ளை அறிக்கை 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை ஆய்வு செய்கிறது.
அதன்படி, மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.2,29,579 கோடியாக, அதாவது 19 சதவீத வளர்ச்சியுடன் கணிக்கப்பட்டுள்ளது....










