திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் ரூ.3.34 லட்சம் கோடி முதலீடு இழப்பு: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
admin - 0
திமுக ஆட்சியில் ரூ.3.34 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகம் இழந்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு வரவேண்டிய 25 முக்கிய முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3.34 லட்சம் கோடியாகும். இதனால் 2 லட்சத்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர்.
டாடா...
நண்பர்களுடன் கடலில் குளித்தபோது, அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்தார். சென்னை, புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் இஷாந்த் குமார் (17).
இவர் 12-ம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சேரவிருந்தார். இந்நிலையில், இஷாந்த் குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் நேற்றுமுன்தினம் காலை திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றார்.
அங்கு அனைவரும் ஒன்றாக கடலில் குளித்தனர். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் தொட்டுப் பிடித்து விளையாடியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில்,...
வாட்ஸ்-அப் செயலியில் வழங்கப்படும் 44 விதமான சேவைகளை இதுவரை 1.86 லட்சம் பேர் பெற்று பயன் அடைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கு ஏதுவாக கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி வாட்ஸ்-அப் செயலி சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, பொதுமக்கள் மாநகராட்சியின் 94450 61913 என்ற...
தமிழகம் முழுவதும் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவு: தமிழக மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த ஆயுஷ் மணி திவாரி தலைமையிடத்து கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் காவல் ஆணையராக இருந்த எஸ்.ராஜேந்திரன் மதுரை காவல் ஆணையராகவும், அங்கு காவல் ஆணையராக இருந்த கபில்குமார் சரத்கர் வட சென்னை கூடுதல்...
தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் எவ்வித மாற்றமும் இன்றி முழுமையாக வாசித்தார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், அரசு தயாரித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சில தகவல்களை சேர்த்தும் வாசித்தார்.
அதன்பிறகு 2024, 2025, 2026-ம் ஆண்டுகளில் பேரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்து, தனது...
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: ஆளுநர் உரை ஆளுங்கட்சிக்கு முழு ஆதரவை தெரிவிக்கும் அறிவிப்பாக மட்டுமே இருந்தது. இதுபோன்ற அறிவிப்புகளை நிறைய பார்த்துவிட்டோம்.
வெறும் அறிவிப்பாக மட்டுமில்லாமல், அதிகாரப்பூர்வமான, ஆளுமைமிக்க ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி இருக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுன்ட்டர்தான் தீர்வாக அமையும். சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் ஆரம்பத்திலும்,...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து...
“எனது அன்புச் சகோதரரின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய, பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்ற வாழ்த்துகிறேன்,” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழக முதல்வர் விஜய் சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,”எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள்...
“தமிழ்நாட்டுக்கு முக்கியமான இந்த தீர்மானத்தை யாரும் எதிர்க்கப் போவதில்லை. தேமுதிகவும் ஆதரிக்கிறது. கூடவே, மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியதை போல், நீர் மேலாண்மையை நாம் உருவாக்க வேண்டும். இனிவரும் மழைக்காலத்துக்கு முன்னதாக நீர் மேலாண்மையை யோசிக்க வேண்டும்.” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள்...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என முதல்வரை நேரில் சந்தித்து வைகோ வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் எந்த பகுதியிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தாமிர ஆலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தினார்.
முதல்வரை சந்தித்த பின் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நானும், பல விவசாயிகள் மற்றும்...










