ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரிடம் 2-வது முறையாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக 2025 அக்டோபர் 6-ம் தேதி புகார் அளிக்கப்பட்டதாகவும், மறுநாளே சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்ததாகவும்...
காஞ்சிபுரத்தில் குடிநீர் பிரச்சினையை சரிசெய்யக் கோரி சாலை மறியல் – அமைச்சர், மேயர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
admin - 0
குடிநீர் பிரச்சினை 4 மாதங்களாக இருப்பதாகக் கூறி காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் உப்பேரிக்குளம் தெருவில் கடந்த 4 மாதங்களாக சில பகுதிகளில் தண்ணீர் வரவில்லை. சில பகுதிகளில் விட்டு விட்டுத் தண்ணீர் வருகிறது. இது தொடர்பாக மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் வனத்துறை அமைச்சரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான ஆர்.வி.ரஞ்சித்குமார் அலுவலகத்துக்கு புகார் அளிக்கச்...
சென்னையில் பைக் ரேஸை தடுக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தனிப்படையினர் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்க போக்குவரத்து போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெள்ளி, சனிக்கிழமைகளில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் செல்வதும், வீலிங் உள்ளிட்ட சாகசங்களில்...
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள இடத்தில் 21.37 ஏக்கரை வணிக பயன்பாட்டுக்கு மாற்ற சிஎம்டிஏ ஒப்புதல்
admin - 0
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட 21.37 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு பிரிவில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது.
பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு முடிவு செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான 25.55 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் ஒரு...
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பகுதி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தனித்தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ல் தொடங்கி...
இடைத்தேர்தல் நடைபெறும் தட்டாஞ்சாவடியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நேரலையில் கண்காணிப்படுகிறது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மங்கலம், தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைத்தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 7-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி இன்று (அக்.6) இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில்...
சைபர் மோசடிகளைத் தடுக்க இந்தியாவில் ஏஐ பாதுகாப்பு நிறுவனம் தேவையான ஒன்று என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கும் வகையில் சந்தனு பால் மற்றும் சம்பாமூர்த்தி இணைந்து எழுதிய “கேஷ்லெஸ் நேஷன்” என்ற நூல் பெங்களூரில் நடைபெற்ற சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார்.
இந்நூலின் அறிமுக...
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 15.99%, தாராபுரத்தில் 17.55% வாக்குப்பதிவாகி உள்ளது.
வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக),...
“நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பது அனைத்துமே சித்தரிக்கப்பட்டது. தாராபுரம் தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என வைரல் வீடியோ குறித்து தவெக வேட்பாளர் சத்யபாமா விளக்கம் அளித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து...
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரிக்கு, ரகசியத் தகவலை கசியவிட்டதாக இந்திய கடற்படை மாலுமி கோவையில் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி (31), இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார். கோவை ரெட்ஃபீல்ட் பகுதியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையமான ஐஎன்எஸ் அக்ரானியில் நடைபெறும் மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் கடந்த ஒரு வாரமாக தங்கி...









