மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

0
17

மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பகுதி மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்​ளன.

தமி​ழ​கத்​தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தனித்​தொகு​தி​களில் இடைத்​தேர்​தலுக்​கான அறி​விப்​பாணையை கடந்த செப்​டம்​பர் 7-ம் தேதி தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் செப்​டம்​பர் 9-ல் தொடங்கி 16-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் ​(தவெக), பரந்​தாமன் (தி​முக), கணிதா சம்​பத்​(அ​தி​முக), சுகந்தி (மார்க்​சிஸ்ட்), ஜானகி​ரா​மன் (நாம் தமி​ழர்) மற்​றும் சுயேட்​சை​கள் உட்பட 27 பேர் களத்​தில் உள்​ளனர். அதே​போல், தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பா​மா(தவெக), சுகன்​யா(​தி​முக), பானு​ம​தி (அ​தி​முக), லட்​சுமணன் (சிபிஐ), கார்த்​தி​கா(​நாதக) உட்பட 22 பேர் போட்​டி​யிடு​கின்றனர்.

தவெக வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் விஜய் மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களில் தலா 2 நாட்​கள் பிரச்​சா​ரம் செய்​தார். திமுக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி உள்​ளிட்​டோரும், அதி​முக வேட்​பாளர்​களை ஆதரித்து அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும் பிரச்​சா​ரம் செய்​தனர்.

கம்​யூனிஸ்ட் வேட்​பாளர்​களுக்கு வாக்கு கேட்டு அக்​கட்​சி​களின் மாநில நிர்​வாகி​களும், நாம் தமி​ழர் கட்​சி​யின் வேட்​பாளர்​களுக்​காக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானும் இரு தொகு​தி​களி​லும் தீவிர பிரச்​சா​ரம் செய்​தனர். இரு தொகு​தி​களி​லும் தேர்​தல் பிரச்​சா​ரம் அக்​டோபர் 4-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது.

இதையடுத்து இடைத்​தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு இன்​று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் பலரும் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இரு தொகு​தி​கள் முழு​வதும் துணை ராணுவத்​தின் பாது​காப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்டு பலத்த கண்​காணிப்பு ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இரு தொகு​தி​களி​லும் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடி மையங்​களில் பதற்​ற​மான​வை​களாக கண்​டறியப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் போலீ​ஸார் மற்​றும் தேர்​தல் பறக்​கும் படை​யினர் பாது​காப்பு பணிக்கு நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

வாக்​குப்​ப​திவை முன்​னிட்டு மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்​குட்​பட்ட பகு​தி​களில் இன்று பொது விடு​முறை வழங்​கப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து வாக்கு எண்​ணிக்கை வரும் 9-ம் தேதி நடை​பெறவுள்​ளது.

அதே போல புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here