மின் வாரியத்தில் காலியாக உள்ள 30,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
admin - 0
மின் வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கம்பியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணிச்சுமை அதிகரிப்பு: குறிப்பாக, 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போது பணிபுரியும்...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு...
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.776 கோடியில் 1,510 குடியிருப்புகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
admin - 0
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.776.51 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,046 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.657.09 கோடி மதிப்பில் 2,649 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள், ரூ.181.74...
ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தமிழ்நாடு மாநில கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ரூ.15.81 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலங்கரை’ ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வரை ஒருங்கிணைந்த மனநல மருத்துவ சேவைகளை வழங்க தேவையான சிறப்பான உள்கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது. அதைக்...
தமிழக அரசின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் பாஜக? – பங்கேற்பு குறித்து முடிவெடுக்காத அதிமுக
admin - 0
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்க இருப்பதாகவும், அதிமுக இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதிகள் எண்ணிக்கை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், தமிழகத்தில் 8 தொகுதிகள் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மக்களவைத்...
விமான நிலையம் அமைக்க பரந்தூரை, தமிழக அரசுதான் தேர்வு செய்து தந்தது. அங்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றால், அதுகுறித்து மாநில அரசுதான் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
நாடு முழுவதும் விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் உணவு விலை பல மடங்கு அதிகம் உள்ளதாக புகார் எழுந்ததால், விமான நிலையங்களில் மலிவு விலை...
அமைச்சர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: திருவள்ளூரில் திமுக அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இருமொழி கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே...
போதைப்பொருள் மூலம் சம்பாதித்த பணத்தை அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளார்: அமலாக்கத்துறை
admin - 0
போதைப்பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் செலுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் ஈடுபட்டுள்ளார் என அமலாக்கத்துறை ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவி்த்து உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக்கூறி அவரை கடந்தாண்டு ஜூனில் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில்...
கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை: ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
admin - 0
கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் வே.ராஜாராமன் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: சிலப்பதிகாரம் என்னும் பெருங்காப்பியத்தை தமிழுக்கு தந்து அழியாப் புகழ் பெற்ற இளங்கோவடிகளுக்கு கேரளத்தில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைய வேண்டும் என்பது கேரளம் வாழ் தமிழர்களின் நீண்ட கால விருப்பம். அந்த வகையில் கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள்...
ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன்: ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற பாமக, அமமுக வலியுறுத்தல்
admin - 0
தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக, அமமுக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான...










