தென் மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (பிப்.28) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை...
பாரத் நெட் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 11,507 கிராம பஞ்சாயத்துகள் இணைப்பு: அமைச்சர் பிடிஆர் தகவல்
admin - 0
தமிழகத்தில் ‘பாரத் நெட்’ திட்டத்தின் மூலம் 11,507 கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பாரத் நெட்’ திட்டம், இந்தியாவின் அனைத்து கிராமங்களையும், கிராம பஞ்சாயத்துகளையும் டிஜிட்டல் முறையில் இணைப்பதற்கான பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
அதன்படி, நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் இணைத்து, அனைத்து கிராம...
சம்மனை கிழித்ததாக பணியாளர் கைது: சீமான் வீட்டின் பாதுகாவலரை இழுத்து சென்றது போலீஸ் – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
admin - 0
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், பாதுகாவலரை போலீஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்,...
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு ரூ.40 லட்சத்துக்கான நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் ஆச்சாள்புரம் எஸ்.சின்னதம்பி, ஆக்காட்டி ஆறுமுகம், நெல்லை சுந்தரராஜன், மதுரை ஜி.எஸ்.மணி, ஏ.என்.பாக்கியலட்சுமி, சீதாலட்சுமி...
மும்மொழி தொடர்பான விவகாரத்தில், மேடையில் பேசுவதை முதலில் விஜய் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், எங்கள் கட்சிக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு நன்றி.
மக்களவைத் தொகுதி...
இபிஎஃப்ஓ அலுவலகம் நடத்தும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ குறைதீர்ப்பு முகாம்: 4 மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது
admin - 0
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ என்ற வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற குறைதீர்ப்பு முகாம் இன்று (27-ம் தேதி) நடைபெறுகிறது.
இதில், முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் விளக்குதல், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடம் இருந்து வரும்...
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எம்ஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதி தேர்வும் (10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில்),...
உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மருத்துவ கல்லூரியில் மாணவர் தூதுவர் குழு
admin - 0
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரியில் உறுப்பு தான மாணவர் தூதுவர் குழு நேற்று தொடங்கப்பட்டது. அதற்கான இலச்சினையை கல்லூரி முதல்வர் டீன் தேரணிராஜன், துணை முதல்வர் கவிதா ஆகியோர் வெளியிட்டனர்.மருத்துவ கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், இளநிலை மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து உடல்...
3000 வேலைவாய்ப்புகளுடன் எல்காட் நிறுவனத்தின் ஐடி டவர் சோழிங்கநல்லூரில் விரைவில் திறப்பு: அமைச்சர் பிடிஆர்
admin - 0
சென்னையில் 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளுடன் எல்காட் நிறுவனத்தின் சோழிங்கநல்லூர் ஐடி டவர் விரைவில் திறக்கப்படும் என தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்), தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
இதுதொடர்பாக தொழில்நுட்பத் துறைஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத்தின் முதலீட்டு இலக்காக நிலைநிறுத்தும்...
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் அரசுப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை, பல்லவன் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் கூறியதாவது: சென்னையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 600 பேருந்துகளை வாங்கி...










