மொழிக்கொள்கை விஷயத்தில் இருமொழிக் கொள்கைதான் எம்ஜிஆரின் நிலைப்பாடு’ என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக் கழகம் சார்பில் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு சொற்பொழிவு’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன், சி.பொன்னையன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக வேந்தர் கோ.விசுவ நாதன் பேசியதாவது: நான் திமுகவில் இருந்து தாமதமாகத்தான் அதிமுகவுக்கு வந்தேன். அதிமுகவை...
கரூர், பெரம்பலூரில் ரூ.5,000 கோடியில் காலணி தொழிற்சாலைகள்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
admin - 0
கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் தோல் அல்லாத காலணி உற்பத்தி தி்ட்டங்களை நிறுவ, எவர்வான் கோத்தாரி புட்வேர் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும்...
தவெக எளிய மக்களுக்கான கட்சி, பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவதே முதல் பணி என்று தவெகவின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் தனியார் சொகுசு விடுதியில் நேற்று நடந்தது. கட்சித் தலைவர் நடிகர் விஜய் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷார், தலைமை நிலைய செயலாளர்...
அன்பில் மகேஸ் Vs வானதி சீனிவாசன்: மும்மொழிக் கொள்கை ‘நோக்கம்’தான் என்ன? – கேள்விகளும் பதில்களும்
admin - 0
“இன்னொரு மொழிப்போருக்கு தயாராவோம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் போர்க்குரல் எழுப்பும் அளவுக்கு தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதங்கள் தமிழகத்தில் அனலடிக்கின்றன. இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் எழுப்பிய கேள்விகளும் அதற்கான பதில்களும் தொகுப்பாக இங்கே…
முதலில், வானதி சீனிவாசனின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் அன்பில்...
நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத் தில் பாமக பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறினார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் இல்ல திருமண விழாவில் அன்புமணி பேசும்போது, “கல்வியை கட்டணமின்றி தர வேண்டியது அரசின் கடமை. ஆனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு மொழி என்பதுதான் பாமகவின் மொழிக் கொள்கை. பிற மொழிகளைக்...
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனை நீங்கள் கவனியுங்கள். உங்கள் நலனை கவனிக்க இந்த அரசு இருக்கிறது என்று உறுதியுடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப்பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, சென்னை திருவான்மியூரில்...
நாடாளுமன்ற தொகுதி மறு வரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தமிழக முதல்வர் தவறான தகவல்களை தெரிவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் திமுக வீழ்த்தப்பட்டு பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நேற்று...
கோடை மின்தேவையை சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தரவேண்டும்: மின்வாரிய தலைவர் கோரிக்கை
admin - 0
“தமிழகத்தில் வரும் கோடை காலங்களில் மின் விநியோகத்தை சமாளிப்பதற்காக மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்” என மத்திய அரசிடம், மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லியில் மத்திய அரசின் எரிசக்தித் துறை செயலர் பங்கஜ் அகர்வால் மற்றும் நிலக்கரி துறை செயலர் விக்ரம் தேவ் தத் ஆகியோருடன் இணை கூட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக மின்வாரிய தலைவர்...
ஓய்வூதிய குறைப்பு நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்: மருத்துவர் சங்கங்கள் வலியுறுத்தல்
admin - 0
ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மருத்துவர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓய்வூதியத்தை திருத்தியமைத்தல் என்ற பெயரில், ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை மருத்துவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை...
மத்திய அரசின் வேளாண்மை சந்தைப்படுத்தலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துகேட்புக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை நிதி நிலை அறிக்கை தொடர்பான கருத்துகேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற...










