வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை குறைப்பதா? – மத்திய அரசுக்கு ராமதாஸ், செல்வப்பெருந்தகை கண்டனம்
admin - 0
மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை குறைக்கும் முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்: மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை இப்போதுள்ள 41 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று 16-ம் நிதி ஆணையத்தை கேட்டு கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாநிலங்களின் நலன்களுக்கு எதிரான...
இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கவிழாவில் மத்திய கல்வி இணை அமைச்சர் சுகாந்தோ மஜும்தார் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை ஐஐடி-யில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான 2 நாள் தொழில்நுட்ப கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை மத்திய கல்வி இணை அமைச்சர் சுகாந்தோ மஜும்தார் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுமை கண்டுபிடிப்பு ஆகிய...
ரம்ஜான் நோன்பு நாளை (மார்ச் 2) தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். ரம்ஜான் மாதத்தின் முந்தைய மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
அந்த வகையில், நாளை (மார்ச் 2) முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘வெள்ளிக்கிழமை மாலை ரம்ஜான் மாத பிறை...
தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளி்ட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (மார்ச் 1) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகத்தில்...
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், சீமானிடம் வளசரவாக்கம் போலீஸார் நேற்று இரவு விசாரணை நடத்தினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். திரைப்பட இயக்குனராக பணியாற்றியபோது அவருக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளித்திருந்தார். இதையடுத்து,...
நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: இபிஎஸ்
admin - 0
நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக, சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும், என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக, புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி ஆகியவை சார்பில் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலங்களவை...
பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: சர்ச்சை கருத்து தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர் திடீர் இடமாற்றம்
admin - 0
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் பயின்று வரும் மூன்றரை வயது சிறுமி ஒருவர், கடந்த 24-ம் தேதி உணவு இடைவேளையின்போது கை கழுவுவதற்காக வெளியே சென்ற நிலையில், அவரைக் காணவில்லை.
ஆசிரியை மற்றும் உதவியாளர்...
நான் சொல்வதை கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் கேட்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக சில நாட்களுக்கு முன்பு தர்மச்செல்வன் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நேற்று முன்தினம் தருமபுரியில் கட்சி செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் தர்மச்செல்வன் பேசியதாக வெளியான ஆடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், “நான் சொல்வதை...
தொகுதி மறுசீரமைப்பில் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் ஏன் பாதிக்க வேண்டும்? – முதல்வர் ஸ்டாலின் கேள்வி
admin - 0
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தலைமை தாங்கினார். மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றி பேசியதாவது:
கடந்த 2019-ம் ஆண்டு முதல்...
தினசரி பால் கொள்முதல் அளவை அதிகாரிகள் உயர்த்த வேண்டும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
admin - 0
தினசரி பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மேலாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார்
அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உள்ள பொது மேலாளர்கள் மற்றும் இணையத்தில் உள்ள அனைத்து துறைத் தலைவர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆவின் பொது மாவட்ட கூட்டுறவு...










