பெண்களின் வலிமை மற்றும் சாதனைகளைப் பாராட்டிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பெண்கள் தங்கள் முழு ஆற்றலை உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று பேசியதாவது: கல்வி, நிர்வாகம், நீதித்துறை, பாதுகாப்பு, மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், கலைகள், தொழில் முனைவு மற்றும் விளையாட்டு ஆகிய அனைத்துத்...
டெல்லி யூனியன் பிரதேசத்தில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
தலைநகர் டெல்லியில் சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு (பிங்க்), மெஜந்தா உள்ளிட்ட பெயர்களில் 10-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் பிங்க் மற்றும் மெஜந்தா வழித் தடங்கள் இணைக்கப்பட்டு நாட்டின் முதல் வட்ட மெட்ரோ பாதை (ரிங்...
நிதிஷ் மகன் நிஷாந்த் குமார் ஜேடியு கட்சியில் இணைந்தார் – துணை முதல்வராக்க கட்சியினர் ஆதரவு
admin - 0
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் (50) ஐக்கிய ஜனதா தள கட்சியில் (ஜேடியு) உறுப்பினராக நேற்று சேர்ந்தார். அவரை துணை முதல்வராக்க கட்சி எம்எல்ஏ.க்கள், எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிஹாரில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி வெற்றது. நிதிஷ் குமார் 10-வது முறையாக பிஹார் முதல்வரானார். இந்நிலையில் நிதிஷ் குமாரின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தனது மகன்...
வரும் டிசம்பருக்குள் ஹைதராபாத்தில் டீசல் பேருந்துகள் இருக்காது என தெலங்கானா முதல்வர் ரேவந்த் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: கல்லூரி மாணவர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். அது இந்த நிதியாண்டில் சாத்தியம் இல்லை. ஆனால், இத்திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
ஹைதராபாத் நகரை மாசற்ற நகரமாக மாற்ற, இங்கு ஓடும் 2,800...
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலின் கழிவறையில் மதுரா துறவி அசுதோஷ் பிரம்மச்சாரி தாக்கப்பட்டு அவரது மூக்கறுக்கப்பட்டது. இவர், ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி மீது போக்ஸோ வழக்கு பதிவாகக் காரணமானவர்.
பிரயாக்ராஜ் செல்ல கடந்த சனிக்கிழமை இரவு காஜியாபாத்தில் ரீவா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். ரயிலில் அவர் கழிவறைக்கு சென்றபோது அடையாளம் தெரியாத சிலர் துறவி அசுதோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். முகச்சவரக் கத்தியில் துறவியின் மூக்கை அறுத்து...
மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் போர்களுக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மோதல்கள் மூலம் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது என்பதை பின்லாந்து அதிபர் உடனான சந்திப்பின்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்புடன், பிரதமர் மோடி நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தரப்பு உறவுகளை...
கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்காக அமைச்சகங்கள் செய்த பணிகளின் விவரத்தைக் கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இவற்றை புள்ளிவிவரங்களுடன் சமர்ப்பிக்கும்படி மத்திய அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த 2024-ல் நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், முக்கியப் போட்டியாளரான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றார். இவருடன் பதவியில் அமர்ந்த மத்திய...
இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி அதிகாலை ஈரான் போர்க் கப்பல் ஐஆர்ஐஎஸ் டேனாவில் இருந்து அவசர உதவி கோரி கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இலங்கையின் காலே பகுதியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் ஈரான் போர்க்கப்பல் கடலில் மூழ்கியது. இது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக...
மாநிலங்களவை உறுப்பினராகும் முதல்வர் நிதிஷ் குமாரால் பிஹார் அரசியலில் பாஜக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையொட்டி நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியினர் ஆதரவு, எதிர்ப்பு என இரு வேறு கருத்துகளுடன் பிளவுபட்டுள்ளனர்.
பிஹாரில் 10-வது முறை முதல்வராக சுமார் 20 வருடங்களாகத் தொடர்கிறார் ஜேடியுவின் தலைவரான நிதிஷ் குமார். தற்போது அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக செல்வது பிஹார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம்,...
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் குவாஹாத்தியிலுள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதனுடனான தொடர்பு அறுந்துபோனது. இதையடுத்து விமானத்தைத் தேடும் பணிகளை இந்திய விமானப் படை அதிகாரிகள் தொடங்கினர். இந்நிலையில் அந்த விமானம் அசாம் மாநில கார்பி அங்கிலாங் அருகிலுள்ள சோக்கி ஹோலா என்ற இடத்தில் நொறுங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்தில் மீட்புப் பணியில்...










