திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையில் திருமலையில் நேற்று நடைபெற்றது.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருணாகர் ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேவஸ்தானத்தின் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 9 ஆயிரம் பேருக்கு ஊதியஉயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் - வன விலங்குகள் மோதலை குறைக்க நடைபாதையில் 7-வது மைல் பகுதியில் ‘நித்ய சங்கீர்த்தனார்ச்சனை’...
டெல்லியில் 11.7 லட்சம் பேர் குடிநீர் கட்டண பாக்கியாக ரூ.5,737 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் குடிநீர் கட்டண பாக்கியை செலுத்தாதவர்களுக்கு ஒரே முறையில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் திட்டம் டெல்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை அமல்படுத்தக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி தொண்டர்களிடம் முதல்வர் கேஜ்ரிவால் பேசியதாவது:டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த பாஜகவினர் முயற்சி...
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் சங்க பேரணியில் கலந்து கொண்டு மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பேசியதாவது:நாட்டில் பெரும்பான்மையான அதாவது 65 சதவீத மக்கள் நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளனர். எனவே, வரும் நாட்களில் நாம் அதற்காக உழைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவையில் 400 இடங்களை பெறுவதை உறுதி...
காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் 100 கி.மீ. தொலைவு வரை ஓடியது. ரயில்வே ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி ரயிலை நிறுத்தினர்.
கடந்த 2010-ம் ஆண்டில் ஹாலிவுட்டில் 'அன்ஸ்டாப்பபிள்' என்ற திரைப்படம் வெளியானது. 39 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில், ஓட்டுநர் இல்லாமல் சீறிப் பாயும். அந்த சரக்கு ரயிலை நிறுத்த நடக்கும் அதிதீவிர போராட்டங்கள் திரைப்படத்தில் விவரிக்கப்பட்டு இருக்கும். இதுபோன்ற சம்பவம் காஷ்மீரில்...
சீன பொருட்கள் சந்தைகளில் குவிவதால் சிறுதொழில், கைவினைஞர்கள் பாதிப்பு: யாத்திரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
admin - 0
ராகுலின் இந்திய ஒற்றுமை நியாயயாத்திரை உ.பி.யின் மொரதாபாத்தில் இருந்து சம்பல் வழியாக : நேற்று அலிகார் வந்தடைந்தது. ராகுல் காந்தியை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
அலிகாரின் பூட்டுத் தொழில், கைவினைஞர்களின் தயாரிப்புகள் உலகளவில் புகழ்பெற்றவை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மலிவான பொருட்கள் இந்திய சந்தைகளை நிறைப்பதால் உள்ளூர் சிறுதொழில், குடிசைத் தொழில்கள் அழியும் தருவாயில் உள்ளன. அதேநேரம், பெரிய வணிக நிறுவனங்கள்...
ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல் – தமிழ்நாட்டில் 33 ரயில் நிலையங்கள் மேம்பாடு
admin - 0
நாடு முழுவதும் ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். சில ரயில்வே திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
அம்ருத் பாரத் ரயில் நிலையம்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 58 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அம்ருத் பாரத்...
ஜார்கண்ட் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த மாதம் 31-ம் தேதி கைது செய்தது. இதையடுத்து அவர் முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வரானார்.
அவரது தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த போது,ஓட்டெப்பில் பங்கேற்க பிர்சா...
ரியாணாவின் நூ நகரில் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) ஊர்வலத்தில் ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து கலவரம் வெடித்தது. இந்த மோதலில் இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் ஒரு மதகுரு உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில், “காங்கிரஸ் எம்எல்ஏமம்மன் கான் மீது போடப்பட்டஎஃப்ஐஆரில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமான யுஏபிஏ-வின்கீழ் போலீஸார் குற்றச்சாட்டுகளை சேர்த்துள்ளனர். கான் வன்முறையை தூண்டியதாகவும்,...
கர்நாடகாவில் கோயில்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நடந்துவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று, ‘கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை (திருத்தம்) மசோதா’வை நிறைவேற்றியது. இந்த சட்டத்திருத்தத்துக்குப் பிறகு, கோயிலின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த கோயில்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல்...
ஆந்திர மாநிலம் முழுவதும் காலியாக உள்ள அரசு ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்பக் கோரி ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதை முன்னிட்டு அக்கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா முன்தினம் இரவே விஜயவாடா சென்று, ஆந்திர ரத்னா பவனில் தங்கினார்.நேற்று காலை ஒய்.எஸ். ஷர்மிளா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உண்டவல்லியில் உள்ள தலைமைச் செயலகம்...










