பிஹாரில் நீட் வினாத்​தாள் கசிவு, தேர்வு முறை​கேடு மற்​றும் வேலை​வாய்ப்பு கோரி எதிர்க்​கட்​சிகள் ஆதர​வுடன் கடந்த ஜூலை 25-ம் தேதி பந்த் நடை​பெற்​றது. சிவான் மாவட்​டத்​தில் நடந்த போராட்​டத்​தின்​போது, காவல் துறையினர் நடத்​திய துப்​பாக்​கிச்​சூட்​டில் காயமடைந்த மாணவர்கள், கடந்த வியாழக்​கிழமை டெல்லி சென்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தியை அவரது இல்​லத்​தில் சந்தித்​துப் பேசினர். அப்​போது அவர்​களுக்கு நேர்ந்த அநீதி குறித்து கேட்​டறிந்​ததுடன், அவர்களுக்கு ஆறு​தல் கூறி​னார். இந்​நிலை​யில், இது...
வரும் 2029-ம் ஆண்​டில் போதையில்லாத இந்தியா உருவாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்​துள்​ளார். கோவா​வின் பனாஜி நகரில் அவர் நேற்று நிருபர்​களிடம் கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உரு​வாக்க பிரதமர் நரேந்​திர மோடி இலக்கு நிர்ணயித்​துள்​ளார். இதற்கு போதை​யில்​லாத இந்​தியா உருவாவது அவசி​ய​மாகும். பிரதமர் நரேந்​திர மோடி​யின் வழி​காட்​டு​தல்​களால் நாடு முழுவதும் நக்​சல் தீவிர​வாதத்தை வெற்​றிகர​மாக ஒழித்துள்ளோம். குறிப்​பாக காஷ்மீரில் தீவிர​வாதம் ஒடுக்​கப்​பட்டு...
மத்​திய பிரதேசத்​தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பரி​தாபமாக உயி​ரிழந்​தனர். மேலும் பலர் கவலைக்​கிட​மான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். மத்​திய பிரதேசத்​தின் சாகர் மாவட்​டம், பராஜ் கிராமத்தை சேர்ந்த ஆண்​கள் பலர் நேற்று முன்​தினம் இரவு அங்கு விற்கப்பட்ட கள்​ளச்​சா​ர​யத்தை வாங்கி குடித்​துள்​ளனர். இதையடுத்​து, அவர்​களுக்கு குமட்​டல், வாந்தி போன்ற உடல் உபாதை ஏற்​பட்​டுள்​ளது. அவர்​களை குடும்​பத்​தினர் உடனடி​யாக பண்டா சிவில் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர். இதே​போல அரு​கில்...
குஜ​ராத்​தில் லிவ்​-இன் உறவில் இருந்த பெண் அடித்​துக் கொல்​லப்​பட்ட வழக்​கில், பேருந்து நிலை​யத்​தில் குற்ற நிகழ்வை நடித்​துக் காட்​டிய கொலை​யாளியைக் காவல் துறை​யினர் லத்தியால் சரமாரி​யாக அடித்த சம்​பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்​ளது. குஜ​ராத் மாநிலம் பாவ்​நகரைச் சேர்ந்த ஃபைசல் (20) மீது திருட்டு மற்​றும் வன்​முறை உள்​ளிட்ட வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இவர் காஜல்​பன் பரையா (40) என்ற பெண்​ணுடன் கடந்த சில ஆண்​டு​களாக ‘லிவ்​-இன்’ முறை​யில் வாழ்ந்து வந்​தார்....
உத்​தர பிரதேச மாநிலத்​தில் பெய்து வரும் கனமழை காரண​மாக, அங்​குள்ள வாராணசி​யில் கங்கை ஆற்​றின் நீர்மட்டம் அபாய எச்​சரிக்கை அளவைத் தாண்​டிச் செல்​கிறது. இதையடுத்​து, மாவட்ட நிர்​வாகம் அனைத்து படகு சேவைகளையும் நிறுத்தி வைத்​ததுடன், வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் கண்​காணிப்​பை​யும் தீவிரப்​படுத்​தி​யது. மேலும், பக்​தர்​கள் மற்​றும் பொது​மக்​கள் படித்​துறை​களுக்​குச் செல்ல வேண்​டாம் என்​றும், நீரோட்​டம் அதி​க​மாக உள்ள பகு​தி​களுக்​குள் செல்ல வேண்​டாம் என்​றும் நிர்​வாகம் அறி​வுறுத்​தி​யது. இந்​நிலை​யில், வாராணசி மக்​கள​வைத் தொகுதி...
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, நீர்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சத்யேந்தர் ஜெயின். அப்போது, டெல்லி குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான டெண்டர் யூரோடெக் என்விரான்மென்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு குற்றம் சாட்டியது. குறிப்பாக, பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் கமிஷன் தொகைகள் குற்றம்சாட்டப்பட்ட பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதற்கான...
பாகிஸ்தான் எப்​-16 போர் விமானத்தை வீழ்த்​திய குரூப் கேப்​டன் அபிநந்தன் வர்த்​த​மான், இந்​திய விமானப்படையில் இருந்து விலகி கோவாவை சேர்ந்த ‘பிளை 91’ என்ற தனி​யார் விமான நிறு​வனத்​தில் இணைந்​துள்​ளார். 2019 பிப்​ர​வரி 14 புல்​வாமா தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக, இந்​தியா பாகிஸ்​தானின் பால​கோட் மீது வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது. மறு​நாளே இந்​திய எல்​லைக்​குள் நுழைய முயன்ற பாகிஸ்​தான் போர் விமானங்​களை, அன்​றைய விங் கமாண்​டர் அபினந்​தன் தனது மிக்-21 பைசன்...
திரு​மலை திருப்பதி தேவஸ்​தானத்​தின் இணை நிர்வாக அதி​காரி லோக​நாதத்​தை, வரு​மானத்​திற்கு அதி​க​மாகச் சொத்து சேர்த்​த​தாக திருப்​பதி லஞ்ச ஒழிப்புத் துறை அதி​காரி​கள் நேற்று காலை கைது செய்​தனர். மேலும், இவர் கலப்பட நெய் விவகாரத்​தி​லும் ரகசி​ய​மாகத் தொடர்​பில் இருந்​தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்​துள்​ளது. திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில், ஏழு​மலை​யான் கோயில் வளாகத்​திற்​குள் இணை நிர்​வாக அதி​காரி​யாகப் பணி​யாற்றி வருபவர் லோக​நாதம். இவர் கடந்த ஒய்​.எஸ்​.ஆர். காங்​கிரஸ் ஆட்சிக் காலத்​தில் இருந்தே...
வெளி​நாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவை (எப்சிஆர்ஏ) ஆய்வு செய்ய 31 பேர் அடங்​கிய நாடாளு​மன்ற கூட்​டுக் குழு நியமனம் செய்​யப்​பட்டு உள்​ளது. கடந்த 1976-ம் ஆண்​டில் அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் வெளி​நாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​ முறை) சட்டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2010-ம் ஆண்​டில் அப்​போதைய பிரதமர் மன்​மோகன் சிங் ஆட்​சி​யில் இந்த சட்​டத்​தில் கடுமை​யான விதி​கள் சேர்க்​கப்​பட்​டன. கடந்த 2020-ம் ஆண்​டில் பிரதமர்...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக அங்கு சிக்கித் தவித்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ளனர், மரணத்தை நேரில் பார்த்தோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உள்நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். அந்த வகையில் மேல் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, அசாம்...