திரையரங்கு நெரிசலில் பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் நாம்பல்லி நீதிமன்றம் நேற்று ரெகுலர் ஜாமீன் வழங்கியது.
ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி இரவு புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது. இந்த சிறப்பு காட்சிக்கு படத்தின் கதாநாயகன் நடிகர் அல்லு அர்ஜுன் வந்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி (35) என்பவர் உயிரிழந்தார். இவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ்...
மகா கும்பமேளாவில் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட இருப்பதாக வந்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உ.பி. முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உ.பி.யின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வரும் ஜனவரி 13-ல் தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா முப்தி ஷகாபுத்தீன் ரிஜ்வீ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மகா கும்பமேளாவில் நூற்றுக்கணக்கான...
வட இந்தியாவில் 2-வது நாளாக தொடரும் அடர் பனி மூட்டம்: டெல்லியில் விமான போக்குவரத்து பாதிப்பு
admin - 0
வட இந்தியாவின் சில பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் அடர்ந்த பனி மூட்டம் நிலவியது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிறுவனம் (DIAL) அதிகாலை 12.05 மணிக்கு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "அடர் பனி மூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகளின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணைகளை பயணிகள் தெரிந்து கொள்ள சம்மந்தப்பட்ட விமான நிறுனங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அசவுகரியம்...
போபால் விஷவாயு விபத்து ஏற்பட்டு 40 ஆண்டுக்குப் பிறகு யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து நச்சுக்கழிவுகள் அகற்றம்
admin - 0
மத்திய பிரதேச மாநிலத்தில் யூனியன் கார்பைடு ஆலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருக்கும் நச்சுக்கழிவுகளை அகற்றும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-3 இடைப்பட்ட இரவில் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையிலிருந்து அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் ஐசோசயனைட் (எம்ஐசி) வாயு கசிவு ஏற்பட்டதில் 5,479 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் நீண்ட கால உடல்நலப் பிரச்சினைக்கு...
பிஹார், கேரள மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
பிஹார், கேரளா, மணிப்பூர், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த வாரம் புதிய ஆளுநர்களை நியமித்தார்.
இதில் கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான் பிஹார் ஆளுநராகவும், பிஹார் ஆளுநராக இருந்த விஸ்வநாத் அர்லேகர் கேரள ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்விரு மாநிலங்களின் புதிய ஆளுநர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
பிஹார் தலைநகர்...
உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் உண்டியல் மூலம் ரூ.1,365 கோடி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தினமும் சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இதில் வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பது...
தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) தலைமை வகிக்கிறது பாஜக. பிஹாரில் என்டிஏவுக்கு முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமை வகிக்கிறது. சுமார் 20 வருடமாக அசைக்க முடியாத முதல்வராக பிஹாரில் தொடர்கிறார் நிதிஷ். இடையில் அவர் மாறிய லாலு பிரசாத் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சிலும் நிதிஷ் குமாரே முதல்வரானார். பிஹாரின் கடந்த பேரவை தேர்தலில் நிதிஷைவிட பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி...
ஜெகஜித் சிங்கின் உண்ணாவிரதத்தை முடிக்க நாங்கள் உத்தரவிடவில்லை: பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
admin - 0
ஜெகஜித் சிங்கின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல என்றும் அவருக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்றுதான் உத்தரவிட்டுள்ளோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் எல்லையில் அவர்கள் தடுத்து...
தலைநகர் டெல்லியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
டெல்லி அசோக் விஹாரில் குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து,பயனாளிகளுக்கு சாவிகளை வழங்குகிறார்.
டெல்லி நௌரோஜி நகரில் அமைக்கப்பட்டு உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் 2,500 வீடுகள் கொண்ட பொதுத் தொகுப்பு குடியிருப்புகளை பிரதமர் மோடி...
2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு: குகேஷ், மனு பாகர் உட்பட 4 பேருக்கு ’கேல் ரத்னா
admin - 0
பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷ், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகிய 4 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டுக்கான...










