Google search engine
லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும் என ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் நிலை இருப்பதாக எச்சரித்துள்ளதாகவும் தகவல். அண்மைய காலமாக ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு வருவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு...
பிஹார் மாநிலத்தில் முன்பு லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மெகா கூட்டணியில் அங்கம் வகித்தது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைந்தார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் லாலு பிரசாத் பேசுகையில் "கூட்டணிக்கான கதவுகள் திறந்திருப்பதாகவும், முந்தைய கசப்பு உணர்வுகளை மறந்து நிதிஷ் குமார்...
கடந்த 1984-ல் நடந்த சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 88 பேருக்கு வேலைவாய்ப்பில் சலுகை தர டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி, கல்வித் தகுதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல வயது வரம்பு 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பணியில் பல்நோக்கு திறன் ஊழியர் (எம்டிஎஸ்) பணிக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக, கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி...
ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் நேற்று மர்ம ட்ரோன் பறந்தது. இதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவின் புரி நகரில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் நேற்று அதிகாலை 4.10 மணிக்கு மர்ம ட்ரோன் பறந்தது. சுமார் 100 அடி உயரத்தில் அரை மணி நேரம் ட்ரோன் வட்டவடித்தது. இதனை பலர் வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். புரி...
சீனாவில் ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனாவில் எச்எம்பிவி தொற்று பரவியுள்ளதாக வந்த தகவலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த தொற்று கடந்த 2001-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது கேரளா உட்பட உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த தொற்று இதற்கு முன்பும் கேரளாவில்...
குஜராத்தின் போதாத் மாவட்டம் ஜம்ரலா கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர், கடந்த மாதம் 30-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனது இறப்புக்கு காரணமான மனைவிக்கு பாடம் புகட்டுங்கள் என தனது குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். அதில், “தனது மகனிடம் மருமகள் அடிக்கடி சண்டையிட்டு...
மும்பையில் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் அஸ்ரப் என்று அழைக்கப்பட்ட சப்னா தீதி. இவர் மெஹ்மூத் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனது கணவருக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பிருப்பது அப்போது அவருக்கு தெரியாது. மெஹ்மூத் கான் துபாய் சென்று திரும்பியபோது மும்பை ஏர்போர்ட்டில் வைத்து சப்னா கண் முன்பாகவே கூலிப்படை அவரை சுட்டுக் கொன்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சப்னா தனது கணவரின் சாவுக்கு யார்...
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் ஊழல் ஆட்சி அகற்றப்படும். பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நமோ பாரத் ரேபிட் ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி சுமார் 100 கி.மீ. முதல் 250 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின்படி தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசத்தின் மீரட் நகரங்களுக்கு இடையிலான...
டெல்லி ரயில் நிலையத்தின் இலவச சக்கர நாற்காலியை பயன்படுத்த , வெளிநாட்டு வாழ் இந்திய பெண்-ஐ ஏமாற்றி ரூ.10,000 வசூலித்த சுமை தூக்கும் தொழிலாளியின் உரிமத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. குஜராத்தில் பிறந்தவர் பாயல். இவர் லண்டனில் வசிக்கிறார். இவர் தனது வயதான தந்தையுடன் ஆக்ரா செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்துக்கு கடந்த மாதம் 21ம் தேதி வந்தார். அங்கு சுமை தூக்கும் தொழிலாளி உதவியுடன் தன் தந்தையை...
உத்தர பிரதேசத்தில் கள்ளநோட்டு அச்சடித்து, தனது 3 மனைவிகள் மூலம் புழக்கத்தில் விட்ட மதரஸா மேலாளரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேசம் சிராவஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் நூரி என்ற முபாரக் அலி. இவர் இங்குள்ள மதரஸா ஒன்றில் மேலாளராக பணியாற்றுகிறார். இவருக்கு 3 மனைவிகள். அதில் ஒருவர் மதரஸாவில் பணியாற்றுகிறார். இந்நிலையில் மதரஸாவின் ஒரு அறையில் கள்ள நோட்டுக்களை நூரி அச்சிட்டுள்ளார். கள்ளநோட்டுகளை தனது மனைவிகள்...