Google search engine
புதுச்​சேரியைச் சேர்ந்த சி.செல்​வ​ராணி என்பவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர் வகுப்​பைச் சேர்ந்​தவர். அவரது தாயார் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர். செல்​வ​ராணி தேவால​யத்​தில் ஞானஸ்​நானம் பெற்​றவர். இந்நிலை​யில், புதுச்​சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்​துக்காக பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் எனக்​கூறி விண்​ணப்​பித்து தேர்ச்சி பெற்​றார். பின்னர் சாதிச் சான்​றிதழ் சரிபார்ப்​பின்​போது அவர் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர் என்பது கண்டறியப்​பட்​டது. இதையடுத்து அவர் தனக்கு தனது தந்தை​யின் இந்து மதத்​தின் அடிப்​படை​யில் பட்டியலின...
அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது. அரசியலமைப்பு சட்ட 75-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. ஜனவரி 26 வரை 2 மாதங்களுக்கு இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. டெல்லியில் நடைபெற்ற தொடக்க விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் மோடி படிக்கவில்லை என்று...
சொந்த மகனை, 26 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்துவிட்டு, தப்பி தலைமறைவான தந்தையை, திருமண பத்திரிக்கை மூலம் ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குடிபண்டா மண்டலம், திண்ணஹட்டிகி கிராமத்தை சேர்ந்தவர் திப்பேசாமி. இவர் தனது மனைவி மீது தீவிர சந்தேகம் கொண்டிருந்தார். இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு மகன் இருந்தான். இந்நிலையில், கடந்த 1998-ம் ஆண்டு மனைவி மற்றும் மகனுடன் தசரா பூஜையில் பங்கேற்க...
கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று அதிகாலை கொச்சி சென்று கொண்டிருந்தது. திருச்சூர் அருகே நாட்டிகா என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதியது. பின்னர் அங்கு சாலையோரம் கூடாரம் அமைத்து...
பெங்​களூருவை சேர்ந்த சமூக வலைதள பயனர் ஷரத் அண்மை​யில் யாசகர் ஒருவரை பற்றிய வீடியோவை தனது இன்ஸ்​டாகிராம் பக்கத்​தில் பகிர்ந்​தார். பெங்​களூரு ஜெயநகர் சாலை​யோரத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அந்த வீடியோ​வில் பேசிய நடுத்தர வயதுடைய ஆண், ''நான் ஜெர்​மனி​யில் உள்ள ஃபிராங்க்ஃபர்ட் நகரில் 2013-ம் ஆண்டு பொறி​யாளராக பணியாற்றினேன். அப்போது அங்கு எம்.எஸ். முடித்​தேன். பின்னர் க்ளோபல் வில்​லேஜில் மைண்ட் ட்ரீ நிறு​வனத்​தில் நல்ல சம்பளத்​தில் வேலை​யில் இருந்​தேன். பின்னர்...
மும்பை தீவிரவாத தாக்குதலின்போது அஜ்மல் கசாபை கொல்ல நினைத்தேன், ஆனால் அப்போது எனக்கு வயது 9 என உயிர் பிழைத்த பெண் தெரிவித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி (26/11) கடல் மார்கமாக மும்பையில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் , சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், ஓபராய் டிரைடன்ட், தாஜ்மகால் பேலஸ் ஓட்டல் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர்...
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங் களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கே.ஏ.பால். கடந்த 2008-ம் ஆண்டில் இவர் பிரஜா சாந்தி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். இவர், சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல்...
பாபநாசம் அருகே முன்​விரோத தகராறில் இளைஞர் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் சகோதரர்கள் 2 பேர் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கும்​பகோணம் நீதி​மன்றம் நேற்று தீர்ப்​பளித்​தது. மேலும், 3 பேர் விடுதலை செய்​யப்​பட்​டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மேல கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்​ராஜ் (22). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் செல்​வ​மணி​யின் இருசக்கர வாகனத்தை, மருத்​துவக்​குடி பாரதி​யார் நகரைச் சேர்ந்த...
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை மற்றும் உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் பாஜக வெற்றிக்கு முஸ்லிம் வாக்குகளின் பிரிவு சாதகமாகி உள்ளது. மேலும், அக்கட்சிக்கு இந்துத்துவா மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) பிரச்சாரமும் கூடுதல் பலனை அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் முஸ்லிம் வாக்குகள் 12 சதவீதமாக உள்ளது. இங்குள்ள 288 தொகுதிகளில் 38-ல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். இந்த 38 தொகுதிகளில் பாஜக...
உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சமாஜ்வாதி எம்.பி. மற்றும் எம்எல்ஏ மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கடந்த 19-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “சம்பல் மாவட்டம் சந்தவுசி நகரில் ஹரிஹர் கோயில் இருந்தது. முகலாயர் காலத்தில் இந்தக் கோயிலின்...