காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை குறிவைத்து " நேஷனல் ஹெரால்ட் கொள்ளை" என்று எழுதப்பட்ட பையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்த பாஜக எம்பி பன்சூரி ஸ்வரஜால் பரபரப்பு ஏற்பட்டது. நேஷனல் ஹெரால்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக கூறி அவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதற்கு, காங்கிரஸ்...
மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான், பிஹார் முதல்வர் பதவிக்கு மீண்டும் குறிவைத்துள்ளார். பிஹாரில் வரும் அக்டோபரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து கூறிய சிராக் பாஸ்வான், பிஹார் அரசியலில் தீவிரமாக ஈடுபட விரும்புவதாகவும், தேசிய அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார். எல்ஜேபி இளைஞர் அணி மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாட்னாவில் நடைபெற்றது. அதில் சிராக் பாஸ்வான்...
இந்தியாவின் வளர்ச்சியில் இணைய வேண்டும் என உலகளாவிய நிறுவனங்களின் சிஇஓ-க்களுடன் நடைபெற்ற சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் உலகளாவிய நிறுவனங்களின் சிஇஓ-க்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். டூரிங் நிறுவனத்தின் சிஇஓ ஜொனாதன் சித்தார்த் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு புரட்சியில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் எனவும், இதற்காக இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது பற்றி விவரித்தார். டேட்டாரோபோட் நிறுவனத்தின்...
இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த (பிடிஏ) பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்கக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: இரு நாடுகளிலும் வேலை உருவாக்கம் மற்றும் குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த பிடிஏ ஒரு சிறப்பான வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம், இருதரப்பு வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு சீராகும். பல்வேறு...
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உளவுத் துறை அதிகாரி தனது மனைவி, குழந்தைகள் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்த நிலையில், சவுதி அரேபியாவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். இன்று (ஏப்.23) காலை சவுதியில் இருந்து புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, விமான நிலைய வளாகத்தில் தேசிய பாதுகாப்பு...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இந்தக் கொடூர தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளில் ஒருவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிந்தவை: கமல்ஹாசன்: “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என்னுடைய அனுதாபங்கள். காயமடைந்தவர்களுக்கு வலிமையும் மீட்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன். துக்கத்திலும், உறுதியிலும், சட்டம், ஒழுங்கு மற்றும்...
பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தொலைபேசியில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவரின் மூத்த ஆலோசகராக தொழிலதிபர் எலான் மஸ்க் செயல்படுகிறார். ட்ரம்புக்கு பதிலாக எலான் மஸ்கே ஆட்சியை நடத்தி வருகிறார் என்று அமெரிக்க ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம், டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் என பல்வேறு முன்னணி...
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ளது ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம். இதன் செயலாளராக இருப்பவர் சுவாமி சுப்ரதீப்தானந்தா. இவருக்கு கடந்த மார்ச் 17-ம் தேதி ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த காவல் துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது அவர், தொழிலதிபர் நரேஷ் கோயல் தொடர்பான வழக்கில் சுவாமி சுப்ரதீப்தானந்தா பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான...