ஆந்திர மாநிலம் அமராவதியில் சட்டப்பேரவைபட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சபாநாயகர் அய்யண்ண பாத்ருடு நேற்று கூறியதாவது:
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களான பாலநாகி ரெட்டி, சந்திரசேகர், மச்ச லிங்கம், விருபாட்சி, விஸ்வேஸ்வர ராஜு, அமர்நாத் ரெட்டி, தாசரி சுதா ஆகியோர் பட்ஜெட் கூட்டத்தில் ஆஜராகமேலேயே பேரவைக்கு வந்து, இங்குள்ள பதிவேட்டில் ரகசியமாக கையெழுத்திட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இது சரியில்லை. மக்கள் பிரச்சினைகளை அவர்கள் பேரவையில் பேச வேண்டும். அவர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும். யாருக்கும் தெரியாமல் பேரவை பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்வது அழகல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.