ராகுல் மீதான அவதூறு வழக்கு: வழக்கறிஞர் போராட்டத்தால் தள்ளிவைப்பு

0
56

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை, வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக ஏப்ரல் 3-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.

கடந்த 2018 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. உ.பி.யின் சுல்தான்பூரில் பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா தொடந்த இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் கைது உத்தரவுக்கு பிறகு ராகுல் கடந்த 2024 பிப்ரவரியில் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். ஜூலை 26-ல் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். தான் குற்றமற்றவர் எனவும் இந்த வழக்கு தனக்கு எதிரான அரசியல் சதியின் ஒரு பகுதி என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால் வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளதாக ராகுலின் வழக்கறிஞர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here