மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டு 2 நாட்களுக்கு பின்பும் பதற்றம் நிலவுகிறது. பள்ளிகள், கடைகள் மூடப்பட்டுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குகி இனத்தவர் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஏற்பட்ட மோதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இங்கு தொடர் கலவரம் நிலவியதால், குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஹமர் இன்புயி பிரிவைச் சேர்ந்த பொதுச் செயலாளர் ரிச்சர்ட்...
நில மாபியா கும்பல்களிடம் இருந்து உ.பி.யில் 64 ஆயிரம் ஏக்கர் மீட்பு: முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்
admin - 0
உ.பி.யில் கடந்த 2017 முதல் நில மாபியா கும்பல்களிடம் இருந்து 64 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
இது தொடர்பாக அரசு விழா ஒன்றில் அவர் நேற்று பேசியதாவது: உ.பி.யில் 2017-ம் ஆண்டுக்கு முன் நில உரிமை மாற்றம், எல்லை நிர்ணயம், பயன்பாட்டு உரிமைகள் உள்ளிவை தொடர்பாக 33 லட்சத்துக்கும் மேற்பட்ட தீர்க்கப்படாத தகராறுகள் இருந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வழக்குகளை தீர்ப்பதற்கு...
ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. ராணுவத்தில் தற்போது 105 மற்றும் 130 எம்எம் ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மாற்றாக 155 எம்எம் ரக பீரங்கிகள் (ஏடிஏஜிஸ்) வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில் இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த...
அவுரங்கசீப்பை அடுத்து மீண்டும் சர்ச்சை: உ.பி.யில் கஜினி முகமதுவின் உறவினர் சையது சாலார் மசூத் காஜி விழாவுக்கு தடை
admin - 0
உ.பி.யின் சம்பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஒரு விழா நடத்துகின்றனர். இந்த விழாவானது சையது சாலார் மசூத் காஜி என்பவர் பெயரில் கடந்த 47 ஆண்டுகளாக நடக்கிறது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 25-ல் தொடங்க இருந்த விழாவுக்கு சம்பல் மாவட்ட காவல் துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது. இதற்கு நம் நாட்டின் மீது படையெடுத்தவர்களையும், கொள்ளையடித்தவர்களையும் கொண்டாட தேவையில்லை” என்று காரணம் கூறியுள்ளது.
கஜ்னாவியில் இருந்து...
தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்பிக்கள் கண்டன வாசகத்துடன் டி-ஷர்ட்: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
admin - 0
மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்பிக்கள் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது மக்களவையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள், ஆங்கிலத்தில் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்து பங்கேற்றனர்.
“நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும். தமிழ்நாடு போராடும்....
சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இன்னும் ஓராண்டில் இந்தியா, நக்சலைட்கள் இல்லாத நாடாக மாறும் என்றும் உறுதிபட கூறினார்.
இந்தியாவில் நச்சலைட் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் உள்ளது. இம்மாநிலத்தில் நக்சலைட் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு படைவீரர்கள் தேடுதல் வேட்டையில்...
மகாராஷ்டிராவில் நாக்பூர் கலவரத்தை தூண்டியதாக கூறி சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முக்கிய நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “ நாக்பூரில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பகீம் கான் என்பவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் அரசியல்வாதியான இவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் வைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாக்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 60...
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பான வழக்கில் ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே, பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சர்வதேச எல்லை (ஐபி) மற்றும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத் துறைக்கு கடந்த ஆண்டு தகவல்...
நாட்டின் 28 மாநிலங்களை சேர்ந்த 4.092 எம்எல்ஏக்கள் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஜனநாய சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி மும்பையின் காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ பராக் ஷா, சுமார் ரூ.3,400 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார எம்எல்ஏவாக திகழ்கிறார். இதையடுத்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். காங்கிரஸ் மூத்த...
குஜராத்தில் பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து 88 கிலோ தங்க கட்டிகள், 20 கிலோ நகைகள் மற்றும் ஆடம்பர கைக்கடிகாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குஜராத்தின் அகமதாபாத் நகரில் பூட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கடந்த 17-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் 87.92 கிலோ தங்க கட்டிகள், வைரம் மற்றும் பிற அரிய வகை...










