Google search engine
கிராமம் ஒன்றில் கேபிள் நெட்வொர்க் நடத்தும் மதகஜராஜா (விஷால்), தனது பள்ளி ஆசிரியர் மகள் திருமணத்துக்காக அவர் ஊருக்குச் செல்கிறார். அங்கு தனது நண்பர்களான கல்யாணசுந்தரம் (சந்தானம்), ரமேஷ் (சடகோபன் ரமேஷ்), சண்முகம் (நிதின் சத்யா) ஆகியோரை சந்திக்கிறார். அப்போதுதான் தனது நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பது தெரிய வருகிறது. அந்த பிரச்சினைகளைச் சகல வல்லமை கொண்ட மதகஜராஜா எப்படித் தீர்த்து வைக்கிறார் என்பதை எக்கச்சக்க...
கன்னியாகுமரியில் கிடைத்த வேலையைச் செய்துகொண்டு, தனது தங்கையுடன் (ரிதா) வசிக்கிறார் மாற்றுத் திறனாளி இளைஞனான கோட்டி (அருண் விஜய்). அவர் மீது, சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்யும் டீனாவுக்கு (ரோஷினி பிரகாஷ்) காதல். அதைச் சட்டை செய்யாத அவன், விளிம்பு நிலை மனிதர்களை யாராவது துன்புறுத்தினால் அவர்களை அடித்துத் துவைக்கும் காளையாகச் சீறுகிறான். அவனது கோபத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றில் காவலாளியாகச் சேர்க்கப்படுகிறான். அங்கே நடக்கும்...
ஜனவரி 14-ம் தேதி ரஜினி நடிக்கவுள்ள ‘ஜெயிலர் 2’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ‘கூலி’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனை ஜனவரி 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது மட்டுமன்றி அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகளிலும்...
ஊரார் வியக்கவும் பெற்றோர், உறவினர்கள் மகிழவும் தனது திருமணத்தைப் புதுக்கோட்டை அருகேயுள்ள சொந்த கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்கிறார், சென்னையில் வேலை செய்யும் சத்யா (ஷேன் நிகம்). அவருடைய காதலியும் மணப்பெண்ணுமான மீரா (நிஹாரிகா), திருமணத்துக்காக, முதல்நாளே புதுக்கோட்டை வந்து சேர்கிறார். விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவரைக் காண, செல்போன் பேசியபடி காரை ஓட்டிச் செல்கிறார் சத்யா. வழியில் நிறைமாதக் கர்ப்பிணியான கல்யாணி (ஐஸ்வர்யா தத்தா) மீது காரை...
காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி நாயகன் ஆதரவற்றோர் இல்லத்தில் காவலராக பணிபுரிகிறார். அங்கு நிகழும் வெளியே சொல்ல முடியாத சம்பவத்துக்கு எதிராக நாயகன் ஆற்றும் எதிர்வினைதான் ‘வணங்கான்’ திரைப்படம். கன்னியாகுமரி, ஆழிப்பேரலையில் பெற்றோரை இழந்த கோட்டி (அருண் விஜய்), அவரைப் போலவே திக்கற்று நின்ற தேவியை (ரிதா) சிறுவயது முதலே தனது தங்கையாக வளர்த்து வருகிறார். கிடைக்கிற வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் கோட்டி தன் கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களைத்...
விஷால் உடைய நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக அவன் விரைவிலேயே சிங்கம் போல மீண்டு வருவான் என்று ஜெயம் ரவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ‘மதகஜராஜா’ படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் விஷால். அப்போது அவருக்கு ஏற்பட்ட கை நடுக்கம், கண் பார்வை பிரச்சினை உள்ளிட்ட அனைத்துமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ பதிவு, இணையத்தில் பெரும் வைரலானது....
ஒரு அரசு அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த கதை. இந்த படத்தில் எனக்கு பிடித்ததே அதன் வேகம் தான் என்று ‘கேம் சேஞ்சர்’ குறித்து இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: “எனக்கு ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ போன்ற மாஸ் மசாலா படங்கள் மிகவும் பிடிக்கும். அது போல நாமளும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று மனதில் நீண்டநாட்களாக ஓடிக்...
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகத்தான திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர்,...
அஜித்துடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். ‘கூலி’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையே துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் லோகேஷ் கனகராஜ். அவரிடம் “ரஜினி, கமல், விஜய் என அனைவருடனும் பணிபுரிந்துவிட்டீர்கள். அஜித்துடன் எப்போது?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “மற்றவர்களைப் போலவே எனக்கும் அஜித்துடன் இணைந்து பணியாற்ற ஆசை. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார் லோகேஷ்...
யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி உட்பட பலர் நடிக்கும் படம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்’. இதை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே.நாராயணா, யாஷ் இணைந்து தயாரிக்கின்றனர். யாஷின் 39-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் பற்றி கீது...