மோகன்லால் நடித்து, 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ படம் வெற்றி பெற்றது. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் அடுத்த பாகம் 'எல் 2: எம்புரான்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கியுள்ளார்.
மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ், ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் ஜெரோம் பிளின் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 27-ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி...
நடிகை பாவனா நடித்துள்ள ஹாரர் படமான ‘தி டோர்’ வரும் 28-ம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்தேவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், சிவரஞ்சனி, நந்த குமார், ஜானி, கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, ரமேஷ் ஆறுமுகம் நடித்துள்ளனர்.
கவுதம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வருண் உன்னி இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தை ஜுன் ட்ரீம்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் நவீன் ராஜா தயாரித்துள்ளார். சேப்பயர்...
ஆஸ்கரில் இந்தியா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக நடிகை தீபிகா படுகோன் குற்றம் சாட்டி உள்ளார். 2023-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளராகக் கலந்துகொண்ட அவர், சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் அந்த விருது குறித்துக் கூறியுள்ளார்.
அதில், “இந்தியா பலமுறை ஆஸ்கர் விருதை இழந்துள்ளது. தகுதியான பல இந்திய படங்களும் திறமைகளும் ஆஸ்கரில் புறக்கணிக்கப்பட்டதாக நினைக்கிறேன். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருதை அறிவித்தபோது, பார்வையாளராக நான்...
ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 60.
மதுரையைச் சேர்ந்தவரான ஷிஹான் ஹுசைனி கராத்தே பயிற்சியாளர். சென்னையில் கராத்தே பயிற்சியளித்து வந்த இவர், கே.பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ரஜினியின் ‘வேலைக்காரன்’, கார்த்திக்கின் ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை’, சரத்குமார் நடித்த ‘வேடன்’, விஜய்யின் ‘பத்ரி’ ஆங்கில படமான ‘பிளட் ஸ்டோன்’ என பல படங்களில்...
சினிமா நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி சூட் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல். தற்போது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மும்பை - நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சோனாலி சூட் உடன் அவரது சகோதரி மற்றும் ஒரு உறவினர் ஓவரும் காரில் இருந்துள்ளார். விபத்தில் சோனாலி சூட் மற்றும்...
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு வயது 48.
இயக்குநர் பாராதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அவரது மகன் மனோஜ். தொடர்ந்து அவரது இயக்கத்தில் ஈரநிலம் கடல் பூக்கள் உள்ளிட்ட பாரதிராஜாவின் திரைப்படங்களிலும், அல்லி அர்ஜுனா, மகா நடிகன், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
அண்மையில், மனோஜ் தனது...
‘ரெட்ரோ’ படத்தில் 15 நிமிட சிங்கள் ஷாட் காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறது படக்குழு.
‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ என்ற பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டேவின் நடனம் இணையவாசிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலை ஒட்டி 15 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு. ‘கனிமா’ பாடலைத் தொடர்ந்து சண்டைக் காட்சி, அதனைத் தொடர்ந்து ஒரு காட்சி என 15...
‘சலார் 2’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு பிருத்விராஜ் பதிலளித்துள்ளார்.
’சலார்’ படத்தைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் எப்போது என்ற கேள்வி அப்படம் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கேட்கப்பட்டு வருகிறது. தற்போது ‘எம்புரான்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் பிருத்விராஜிடம் ‘சலார் 2’ எப்போது என்ற கேள்விக்கு கேட்கப்பட்டது.
அதற்கு பிருத்விராஜ், “பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் மும்முரமாக இருக்கிறார். நானும் அடுத்டுத்த படங்களில் மும்முரமாக இருக்கிறேன். பிரபாஸும் ‘ஸ்பிரிட்’...
நலன் குமரசாமி இயக்கும் ‘வா வாத்தியார்’, பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இதையடுத்து ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அது, கார்த்தியின் 29-வது படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் அவர் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, சிம்புவின் ‘மாநாடு’ படங்களில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து...
மோகன்லால், மஞ்சு வாரியர் நடித்து, 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். இதில் டோவினோ தாமஸ், விவேக் ஓபராய், ஜான் விஜய் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘எல் 2: எம்புரான்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 27-ம்தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி...










