Google search engine
இனி தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அறிவித்துள்ளார். இது குறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: "நான் ஒரு நடிகையாக பயணித்துவரும் இந்தப் பாதையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்து ஆதாரங்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். இந்தக் கடிதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள் என்பதற்கான என் உள்ளார்ந்த ஆசையாக இருக்கட்டும். என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே...
பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழில் பிரபல பாடகியாக இருப்பவர் கல்பனா. இவர் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கல்பனாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்ட காவலாளி, இது குறித்து குடியிருப்பில் வசிப்பவர்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். கல்பனாவின் தொலைபேசி எண்ணும் அணைத்து...
கார் ஒன்றில் செல்லும் ஒருவர், குப்பைத் தொட்டியில் இருந்து பளிச்சென ஏதோ மின்னுவதைப் பார்க்கிறார். சற்று உற்றுப் பார்த்தால் அதுவொரு அம்மிக்கல். பல வருடங்களாக அரைபட்டதில் தேய்ந்த அக்கல்லின் மீது சூரிய ஒளிபட்டதால் மின்னியிருக்கிறது என்பது அவருக்கு புலப்பட்டுவிட்டது. இப்போது அதை எடுக்க வேண்டும், டிரைவரிடம் சொன்னால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்ற யோசனை. காத்திருக்கிறார். ஊரடங்குகிறது. மெதுவாக சென்று குப்பைத் தொட்டியிலிருந்த கல்லை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு...
நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தை இரா.சரவணனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எம்.குரு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இதில் பரத், சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் மேகா செட்டி, மாளவிகா கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி, ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்கின்றனர். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ரகுநந்தன் இசை அமைக்கிறார். ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி...
நான் இரண்டு முறை ‘கண்ணப்பா’ வாய்ப்பை நிராகரித்தேன் என்று நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இதன் டீஸர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இப்படத்தின் சிவபெருமான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்‌ஷய் குமார் பேசும்போது, “முதலில், எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் இரண்டு முறை இந்த வாய்ப்பை நிராகரித்தேன். ஆனால், இந்திய சினிமாவில் பெரிய திரையில் சிவனை உயிர்ப்பிக்க நான் சரியான...
‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டார் வெற்றிமாறன். அப்போது அவரிடம் ‘வாடிவாசல்’ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “மே அல்லது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். தற்போது முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். இந்த பதில் சூர்யா ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘வாடிவாசல்’....
ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கேஜிஎஃப்’ பாணி பில்டப்புடன் தொடங்குகிறது டீசர். “ஏகே ஒரு ரெட் டிராகன்… அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா, அவன் மூச்சுலயே முடிச்சுடுவான்’ என்று தெறிக்கிறது அந்த பில்டப். பில்டப் வசனத்துக்கு இடையே அஜித்தின் அறிமுகம் அதகளமாக இருக்கிறது. ‘நாம எவ்ளோ ‘குட்’டா இருந்தாலும்… இந்த உலகம்...
பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் போசனி கிருஷ்ண முரளி ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள நியூ சைன்ஸ் காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து போசனி கிருஷ்ண முரளியை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்து கடந்த ஆட்சியின்போது அவதூறாக பேசியதாக ஜன சேனா கட்சி நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போசனி...
மலையாளத்தில் ஹிட்டடித்த ‘மார்கோ’ படத்தின் இயக்குநர் ஹனிஃப் அதேனி அடுத்ததாக இந்திப் படம் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மார்கோ’. இதன் இயக்குநர் ஹனிஃப் அதேனியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்திப் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது....
பாண்டிராஜ் இயக்கியுள்ள படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இதன் இறுதிகட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாண்டிராஜ் - சந்தோஷ் நாராயணன் இணையும் முதல் படமாக இது அமைந்துள்ளது. விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு...