பாண்டிராஜ் – விஜய் சேதுபதி படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை!

0
232

பாண்டிராஜ் இயக்கியுள்ள படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இதன் இறுதிகட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்படாமல் இருந்தது.

தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாண்டிராஜ் – சந்தோஷ் நாராயணன் இணையும் முதல் படமாக இது அமைந்துள்ளது. விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படவில்லை.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், செம்பியன் வினோத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுகுமார் பணிபுரிந்துள்ளார். இதன் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டதால் அடுத்ததாக பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் சேதுபதி.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here