சரோஜாதேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
admin - 0
மறைந்த நடிகை சரோஜாதேவியின் (87) உடல் சொந்த ஊரில் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை சரோஜாதேவி, பெங்களூருவில் நேற்று முன்தினம் காலமானார்.
அவரது உடலுக்கு கர்நாடகமுதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், கன்னட முன்னணி நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி...
துருவ் சர்ஜா நடித்துள்ள ‘கேடி த டெவில்’ படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் இந்தி நடிகர் சஞ்சய் தத். அப்போது பேசிய அவர், ‘லியோ படத்தில் சிறிய கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டார், இதனால் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆனால், அவர் சீரியஸாக சொன்னதாகச் செய்திகள் வெளியானது.
சஞ்சய் தத் பேசியது குறித்து லோகேஷ்கனகராஜிடம் கேட்டபோது, “அங்கே பேசிய பிறகு அவர் எனக்கு போன் செய்தார்....
“மிகச் சிறந்த மகாகாவியத்தை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” – ‘ராமாயணம்’ தயாரிப்பாளர்
admin - 0
இந்திப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். 2 பாகங்களாக உருவாகும் இதில், ராவணனாக யாஷ் நடிக்கிறார். காஜல் அகர்வால் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி , ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோட், தி சூசைட் ஸ்குவாட் உள்பட பல ஹாலிவுட் படங்களில் ஸ்டன்ட்...
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘தலைவன் தலைவி’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஜூலை 25-ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் கூறியதாவது: இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணமும் இந்தப் படத்துக்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஓர் உண்மை சம்பவத்திலிருந்து...
பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். ஆக்ஷன் ஹீரோவான இவர், தமிழில் துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்திலும் நடித்துள்ளார். இவர் இப்போது ‘ஸ்ட்ரீட் பைட்டர்' என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவருடன் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் கேப்காமின் பிரபலமான...
பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கங்கிபாடுவை சேர்ந்தவர், கோட்டா சீனிவாச ராவ். வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த அவர், நாடகங்களிலும் நடித்து வந்தார். 1978-ம் ஆண்டு ‘பிராணம் கரீடு’ என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அங்கு ஏராளமான படங்களில் வில்லன், குணசித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள அவரை...
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.பி.ராஜேந்திர பிரசாத், தான் இயக்கிய ‘அந்தஸ்தலு’ என்ற படத்துக்காக தேசிய விருதைப் பெற்றவர். தெலுங்கில் சுமார் ஒன்பது படங்களை இயக்கிய பிறகு தமிழில் அவர் இயக்கிய முதல் படம், ‘எங்கள் தங்க ராஜா’.
இது சோபன் பாபு, சாரதா, கிருஷ்ண குமாரி நடித்து தெலுங்கில் வெளியான ‘மானவுடு தானவுடு’ என்ற படத்தின் ரீமேக். இதில் சிவாஜி - மஞ்சுளா ஜோடியாக நடித்தனர். இருவரும் இணைந்து...
நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இதில் தபு, சம்யுக்தா, துனியா விஜய் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் தொடங்கியது.
இதில் தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்நிலையில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமான வில்லியாக இல்லாமல் அவரது...
ஸ்ருதிஹாசன் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். ஆமிர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆக.14-ல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டி, இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர், “என் தந்தையும் (கமல்ஹாசன்) ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள், தமிழ்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி இசை நிகழ்ச்சி ‘பக்தி சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஃபைனலுக்கு முன்னரே இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.இதில் பங்கேற்றுள்ள பவித்ரா மற்றும் கார்த்திக் ஆகியோர், இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட பாடகர்கள் வரும் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான தேவக்கோட்டை அபிராமிக்கு இசையமைப்பாளர்...




