Google search engine
பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘திருக்குறள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் குணா பாபு. தீரன், காளி, இரும்புத்திரை, தடம், கே.டி (அ) கருப்பு துரை, தக்ஸ், லால் சலாம், விக்ரம், வேட்டையன் என பல படங்களில் நடித்துள்ள இவர், ‘திருக்குறள்’ படத்தில் ‘தளபதி பரிதி’ கதாபாத்திரத்தில் நடித்ததை மறக்க முடியாது என்கிறார். அவர் கூறும்போது, “தனியார் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்தேன். சினிமா மீதான ஆர்வத்தால், அதைத்...
தெலுங்கில் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது ‘ஜெய ஜெய ஜெயஹே’. மலையாளத்தில் பேசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’. விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தருண் பாஸ்கர், இஷா ரெப்பா ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு ‘ஓம் சாந்தி...
‘வார் 2’ படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறார் நாக வம்சி. இவர் ஜூனியர் என்.டி.ஆருக்கு நெருங்கிய நண்பர் ஆவார். இந்த உரிமையை சுமார் 90 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாக வம்சி வாங்கியிருப்பதால் தெலுங்கில் பிரம்மாண்ட வெளியீடு உறுதி என்று ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள். இந்தியில் ஜூனியர் என்.டி.ஆர் அறிமுகமாகும் படம் ‘வார் 2’. இதில் ஹ்ரித்திக்...
ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் காலமானார். அவருக்கு வயது 67. பிரபல இயக்குநர் குவென்டின் டரான்டினோவின் ரிசர்வையர் டாக்ஸ், கில்பில், தி ஹேட்புல் எய்ட், ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர், மைக்கேல் மேட்சன். கலிபோர்னியாவின் மலிபு பகுதியில் வசித்து வந்த அவர், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67. அவர் மறைவில் எந்த சந்தேகமும் இல்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ்...
அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம், ‘லவ் மேரேஜ்’. சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து...
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மலையாளப்படம் ‘த்ரிஷ்யம்’. இந்தப் படம் மலையாளத்தில் வசூல் அள்ளியதை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இதன் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்தனர். இந்நிலையில் ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ரஜினிகாந்திடம்தான் முதலில் கேட்டதாக இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “த்ரிஷ்யம் படத்தைப்...
காதல் திருமணம் செய்துகொண்ட கோகுல் (சிவா), குளோரி (கிரேஸ் ஆண்டனி) ஆகியோரின் பத்து வயது மகன் அன்பு (மிதுன் ரியான்). பொருளாதாரத் தேடல்களில் இருக்கும் இருவரும் அன்புவைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்கின்றனர். ஒரு கட்டத்தில் பிடிவாதம் கொண்ட அன்புவை அழைத்துக் கொண்டு, அன்றாடங்களில் இருந்து விடுபட்டு நீண்ட 'பைக் ரைடு'க்குச் செல்கிறார் கோகுல். அந்தப் பயணம்அவர்களுக்கு எதைப் புரிய வைக்கிறது? அங்கு சந்திக்கும் மனிதர்கள், என்ன மாற்றத்தை...
நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தபு, சம்யுக்தா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு கதைப் பிடித்திருந்தால் நடிக்கச் சம்மதிக்கிறேன். ஓர் இயக்குநரின் கடந்த கால தோல்விகளை வைத்து, அந்த இயக்குநரை எடை போடுவதில்லை. அப்படி ஏன் மதிப்பிட வேண்டும்? புரி ஜெகன்நாத் இயக்கும் படம்...
அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை நடிகர் விஜய் பார்த்து பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் - ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்துக்கு...
சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம். மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக...