Google search engine
நடிகை த்ரிஷா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’, அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்து 2005-ம் ஆண்டு வெளியான படம் வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது. மகேஷ் பாபு ஜோடியாக த்ரிஷா நடித்து வெளியான தெலுங்கு படம் ‘அத்தடு’. த்ரி விக்ரம் னிவாஸ் இயக்கிய இந்தப் படம் பஞ்ச் வசனங்களுடனும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடனும் கமர்ஷியல் கதையாக வெளி யானது....
மலையாள நடிகையான மமிதா பைஜூ, ‘பிரேமலு’ படம் மூலம் பிரபலமானார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘ரெபல்’ படத்தில் நடித்தார். அடுத்து விஷ்ணு விஷால் ஜோடியாக ‘இரண்டு வானம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். விஜய்-யின் ‘ஜனநாயகன்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர், தனுஷ் ஜோடியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ், ‘இட்லிக் கடை’ என்ற படத்தை நடித்து இயக்கியுள்ளார். ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இப்போது ஆனந்த்...
விஜய் நடித்த ‘பகவதி’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது. மார்ச் 21-ம் தேதி ஆர்யா நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படம் வெளியாகவுள்ளது. தற்போது அப்படத்துடன் வெளியாகவுள்ளது ‘பகவதி’. 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘பகவதி’. லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான படம் ‘பகவதி’. விஜய், ஜெய், ரீமா சென், வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர்...
எம்.ஜி.ஆர் நடிப்பில் பா.நீலகண்டன் இயக்கிய முதல் படம், ‘சக்கரவர்த்தித் திருமகள்’. இந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து 17 படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் கடைசிப் படம், ‘நீதிக்குத் தலைவணங்கு’. தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவல் பாதிப்பில் தெலுங்கு நடிகர் எம்.பாலையா, ‘நேரமு சிக்‌ஷா’ என்ற பெயரில் எழுதிய கதை இது. கே.விஸ்வநாத் இயக்கத்தில், கிருஷ்ணா, பாரதி, எம்.பாலையா என பலர் நடித்த இந்த தெலுங்கு படம் சூப்பர்...
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருந்தார். சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வரும் அவர் சின்னத்திரையில் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இவர் 2024-25-ம் நிதியாண்டில் ரூ.350 கோடியை வருமானமாகப் பெற்றுள்ளார். இதற்காக அவர் ரூ.120 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தி இருக்கிறார். இதன் மூலம் இந்த வருடம் அதிக...
சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் இயல்பான மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் நாடகத்தில் இருந்து, கொத்து கொத்தாக சினிமாவுக்கு வந்தவர்கள், தவிர்க்க முடியாத நடிகர்களாக மாறினார்கள். இப்போது அவர்களே நமது முன்னோடி அடையாளங்களாக இருக்கிறார்கள். பிறகு சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள், சினிமாவில் தங்களுக்கான இடத்தைப் போராடிப் பிடித்திருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம் என பலரை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். அதே போல யாராவது ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக...
கடந்த 2009இல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இலங்கையின் வடகிழக்குக் கடற்கரை ஊர்களில் ஒன்றான முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்தது. அதில் புலிகள் அமைப்பின் போராளிகளும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களும் இலங்கை ராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதை பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல் 4 தனக்குக் கிடைத்த காட்சிகளின் வழியாக உறுதி செய்தது. அதேபோல், அப்போரில் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை இலங்கை ராணுவம்...
கே.பி.ஜெகன் இயக்கி நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’! விஜய் நடித்த ‘புதிய கீதை’, நந்தா நடித்த ‘கோடம்பாக்கம்’, சேரன் நடித்த ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன். இவர், மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது 'ரோஜா மல்லி கனகாம்பரம்’ என்ற படத்தை இயக்குகிறார். உண்மை சம்பவத்தைத் தழுவி உருவாகும் இப்படத்தில் அவர், கதையின் நாயகனாக...
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக வைத்து, உருவான இந்திப் படம், ‘எமர்ஜென்சி’. கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்து, இயக்கியிருந்தார். ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அவரும் தயாரித்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜனவரி மாதம் ரிலீஸான இந்தப் படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர், “என்ன ஒரு படம். இது...
ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக...