Google search engine
அறிமுக இயக்குநர் ஜுன் மோசஸ் எழுதி இயக்கும் படம் ‘பேய் கதை’. இதில் வினோத் நாயகனாக அறிமுகமாகிறார். ஆர்யலட்சுமி, கானா அப்பிலோ, சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், மைக்கேல், சுமந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரவீன் எஸ்.ஜி. ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு போபோ சசி இசையமைக்கிறார். ஜெர்ரிஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் படத்தைத் தயாரிக்கும் ஜெர்ரி கூறும்போது, “கிரிக்கெட் விளையாடச் செல்லும் நண்பர்கள் எதிர்பாராத...
ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஒடிசாவில் நடந்தது. படப்பிடிப்பில் மகேஷ்பாபு, பிருத்விராஜ் பங்கேற்ற காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. இந்தப் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதில் மாதவன் இணைய உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர் உட்பட பலர் நடித்துள்ளனர். அக்.14-ல் இந்தப் படம் வெளியாகிறது. இந்நிலையில் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சவுபின் சாஹிர், ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தைத் தெரிவித்துள்ளார். “முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்தின்...
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இந்தியில் அறிமுகமாகும் படம் ‘வார் 2’. யாஷ் ராஜ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸ் பட வரிசையின் ஆறாவது திரைப்படமான இதில், ஹிருத்திக்ரோஷன், கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் படம் ஆக.14-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்காக, ஜூனியர் என்.டி.ஆருக்கு மனித இயந்திரம் போலுள்ள ஜாக்கெட்டை உருவாக்கியதாக பிரபல ஆடை...
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் செப்.5-ல் வெளியாக இருக்கிறது. இப்போது சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் நடித்த ‘த கோட்’ படத்தை அடுத்து அவர் இயக்கும் படம் இது. ‘த கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட...
அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் நாயகன் ஜீவா (விஜித் பச்சான்), குழந்தை கடத்தல் வழக்குக்காகக் கைது செய்யப்படுகிறார். சிறைக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டே அவர் அதைச் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. அவர் போலீஸிடம் சில ரகசியங்களைச் சொல்கிறார். செய்யாத குற்றத்தைச் செய்ததாகக் கூறி ஜீவா சிறைக்குச் சென்றது ஏன்? போலீஸாரிடம் அவர் தெரிவித்த ரகசியம் என்ன? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது, படம். உலகம் வேகமாக...
‘ஜனநாயகன்’ விநியோக உரிமை விற்பனை தொடர்பாக விஜய் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார். விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டது ‘ஜனநாயகன்’ படக்குழு. இதர நடிகர்களை வைத்து சில காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியதிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை சன் டிவியும் கைப்பற்றி இருக்கிறது. தற்போது இதர விநியோக உரிமைகள் வியாபாரத்தினை தொடங்க...
ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். சிவபிரகாஷ் இயக்கியுள்ளார். கடந்த 5-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு திரையரங்குகளில் பகல்காட்சியும் மாலை காட்சியும் கிடைத்தால் மக்களைச் சென்றடையும் என்று தங்கர் பச்சான் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "தமிழக அரசியலில் மாற்றத்துக்கான கட்சிகளாக இருக்கக் கூடிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன், பாட்டாளி மக்கள்...
சாந்தனு பாக்யராஜ் -அஞ்சலி நாயர் நடிக்கும் படத்துக்கு ‘மெஜந்தா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பரத் மோகன் இயக்கும் இந்தப் படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்குகின்றனர். படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தரண் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்குப் பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். “காதல், நகைச்சுவை கலந்த...
ஷட்டர் பிரேம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ஹாரர் படத்துக்கு ‘ஹோலோகாஸ்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஜெயகிருஷ்ணன், ஷர்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத், மிதுன்வெம்பலக்கல், ப்ரீத்தி ஜினோ, நஸ்ரின் நசீர் நடித்துள்ளனர். ஷ்யாம் மோகன் இசையமைத்துள்ளார். விபின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மனோஜ் குமார் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தை விஷ்ணு சந்திரன் இயக்கியுள்ளார். அவர் கூறும்போது, “இது உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக்...