Google search engine
அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி நடித்து 1953-ல் வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்கு படம், ‘பிரத்துக்கு தெருவு’ (Bratuku Teruvu). இந்தப் படத்தை 1956-ம் ஆண்டு ‘பலே ராமன்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். இதையடுத்து எல்.வி.பிரசாத் ‘ஜீனே கே ராத்’ என்ற பெயரில் இதை இந்தியில் ரீமேக் செய்தார். 1969-ல் வெளியான இதில் ஜிதேந்திரா, தனுஜா நடித்தனர். இந்தக் கதையை எம்.ஜி.ஆர் நடிப்பில் அப்படியே தமிழில்...
எழுத்தாளர் அகிலன், கல்கியில் தொடராக எழுதிய ‘பாவை விளக்கு’ கதையை அதே பெயரில் சினிமாவாக இயக்கினார், ஏ.பி.நாகராஜன். சிவாஜி, பண்டரிபாய், குமாரி கமலா, சவுகார் ஜானகி, எம்.என்.ராஜம் நடிப்பில் அந்தப் படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே, அகிலன் எழுதிய ‘வாழ்வு எங்கே?’ நாவலையும் திரைப்படமாக்க, திருப்பூர் ஸ்பைடர் என்ற பனியன் நிறுவனம் அதன் உரிமையை பெற்றது. ஸ்பைடர் பிலிம்ஸ் மூலம் அதை ‘குலமகள் ராதை’ என்ற பெயரில் தயாரிக்க, அதையும்...
லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கியுள்ளார். ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமீர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. ஆக.14-ல் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஆமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆமிர்கான் நடித்துள்ள ‘சித்தாரே...
பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள காதல் திரைப்படம், ‘சையாரா’. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இதில் அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகிறார். அனீத் பட்டா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் கங்குலி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஜூலை 18-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ‘சையாரா' என்ற தலைப்புப் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் பாடல்களை 5 ஆண்டுகளுக்கும் மேலாக...
அறிவியல் புனைகதையைக் கூடச் சுவாரஸ்யமாக எழுதிவிடலாம்; ஆனால், நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்றின் கதையை நாவலாக எழுத முடியாது என்று சலித்துக்கொள்கிறார் எழுத்தாளர் ஜோதி ராமையா (சத்யராஜ்). ஆனால், ஆட்டோ ஓட்டுநரான கண்ணனின் (காளி வெங்கட்) வாழ்க்கையை உற்றுநோக்கி, நடுத்தரக் குடும்பம் ஒன்றின் கதையை அவர் நாவலாக எழுத முயலும்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறார். தன்னால் அடுத்தக் கட்டத்தில் அடி எடுத்து வைக்க முடியாது என்று தெரிந்தும், வாரிசுகளையாவது...
மதுரையில் ‘தக் லைஃப்’ படம் பார்த்த இயக்குநர் அமீர், “கமல்ஹாசனை இயக்க வேண்டும் என ஆசை உள்ளது” என்று விருப்பம் தெரிவித்தார். மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிலம்பரசன் ஆகியோர் நடித்த திபை்படம் ‘தக்லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குளில் இப்படம் வெளியானது. மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள குரு தியேட்டரில் இப்படத்தின்...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார். நடிகர் மற்றும் அவரது சகோதரர் பலத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ(43). இவர் தன் தந்தை சிபி சாக்கோ, தாய் மரியம் கார்லஸ் மற்றும் தன் சகோதரர் ஜோக்கர் ஷாக்...
அந்த காலகட்ட நாடக உலகில், டி.எஸ்.நடராஜனுக்குத் தனிப் பெயர் இருந்தது. அவருடைய ‘என் தங்கை’ நாடகம் மாபெரும் வெற்றி பெற்றதால், ‘என் தங்கை’ நடராஜன் என்றே அவரை அழைத்து வந்தனர். இந்த நாடகம் நடந்து வந்த கால கட்டத்தில்தான், பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ நாடகமும் புகழ் பெற்று வந்தது. அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் சில தயாரிப்பாளர்கள், அதைப் படமாக்கக் கேட்டுக்கொண்டனர். இரண்டு நாடகங்களையும் பார்த்தார், ஏ.எஸ்.ஏ.சாமி....
‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தவறான பாதையில் செல்லும் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. த.ஜெயவேல் இயக்கி வருகிறார். அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோஸ் சார்பில் கிளமண்ட் சுரேஷ் தயாரிக்கிறார். அஜய் அர்னால்ட் , அர்ஜுன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன் என பலர்...
இந்தி நடிகர் முகேஷ் கன்னா நடித்துத் தயாரித்த தொடர், ‘சக்திமான்’. தூர்தர்ஷனில் 1997-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற இத்தொடர், சுமார் 8 வருடங்கள் ஒளிபரப்பானது. குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ தொடராகவும் அப்போது இருந்தது. இதை, தின்கர் ஜெயின் இயக்கி இருந்தார். இத்தொடரை சினிமாவாக எடுக்க இருப்பதாக முகேஷ் கன்னா, கடந்த வருடம் தெரிவித்திருந்தார். இதில் சக்திமான் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் அதன் திரைப்பட உரிமையை...