Google search engine
தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர அரசு சார்பில் திரைப்படக் கலைஞர்களுக்கா ஆண்டுதோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த பிறகு திரைத் துறை விருதுகள் தெலங்கானா சார்பில் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அம்மாநிலத்தின் சிறந்த நாட்டுப்புற பாடல் கலைஞரான மறைந்த கத்தர் பெயரில் திரைத் துறை...
கன்னட மொழி குறித்த தனது பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக நடந்த ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு கூறியது: “பல கன்னட அமைப்புகள் கமல்ஹாசனின் படத்தை தடை செய்யக் கோரிக்கை வைத்துள்ளன. எனவே, நாங்கள் அவர்களை சந்தித்து...
மலையாள நடிகரான உன்னி முகுந்தன் மீது, அவரது மேலாளராக இருந்த விபின் குமார் என்பவர், காக்கநாடு இன்ஃபோபார்க் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதில், டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி முகநூலில் பதிவிட்டிருந்தேன். இதனால் கோபமடைந்த உன்னி முகுந்தன், தன்னைத் தாக்கியதாகவும் ‘மார்கோ’ படத்துக்குப் பிறகு அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையாததால் விரக்தியில் இப்படிச் செய்ததாகவும் கூறியிருந்தார். இது பரபரப்பானது. இந்நிலையில், விபின் குமாரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து உன்னி...
ஹாலிவுட் ஃபேன்டசி படமான ‘ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்’ தமிழில் வெளியாகிறது. 2010-ம் ஆண்டு இதே பெயரில் வெளியான அனிமேஷன் படத்தின் ரீமேக் இது. இதன் 2-ம் பாகமும் 2014-ம் ஆண்டு அனிமேஷன் படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்போது இதைத் திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். டீன் டெப்லாய்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் படத்தில் மாசன் தேம்ஸ், நிகோ பார்க்கர், ஜெராட் பட்லர், நிக் ஃப்ரோஸ்ட், ஜுலியன் டென்னிசன் உள்பட...
கமல் அளித்துள்ள பேட்டியில் தனது பெயரைக் குறிப்பிட்டதற்கு நானி நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நானி நடித்து, தயாரித்து வெளியான படம் ‘ஹிட் 3’. இப்படத்தினை விளம்பரப்படுத்த சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அளித்த பேட்டியில், ‘விருமாண்டி’ படத்தின் நீதிமன்றக் காட்சியில் தூங்கி எழுந்தது போல் கமல் நடித்திருந்தது குறித்து சிலாகித்து பேசியிருந்தார் நானி. அதனை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் தன்னால் அது போல் நடிக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது...
சமீபத்தில் பார்த்திபன் - வடிவேலு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். வடிவேலுவை சந்தித்தது குறித்து பார்த்திபன், “நகைச்சுவையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஈடில்லாதவர். சந்தித்தோம். இன்று. விரைவில் படம் வெளியாகும்!” என்று தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் இணைந்து படமொன்றில் நடிக்கவுள்ளார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. பார்த்திபன் - வடிவேலு கூட்டணி காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம். இப்போதும் காமெடி தொலைக்காட்சிகளில் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள்...
தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். 'கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார்....
‘பேரன்பு’ படத்துக்குப் பிறகு ‘ஏழு கடல் ஏழு மழை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ராம். அதைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள படம், ‘பறந்து போ’. இதில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் மேற்கொண்டுள்ளார். ஜூலை 4-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ராம்...
எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ‘டிராபிக் ராமசாமி’ படத்தை இயக்கியவர், விக்கி. அடுத்து ‘கூரன்’ என்ற படத்தைத் தயாரித்தார். இவர் இப்போது ‘வீரசிங்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஈழப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் நடித்துள்ளனர். இதுபற்றி இயக்குநர் விக்கியிடம் கேட்டபோது, “திரைப்பட விழாக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த படம் அரசியல் நையாண்டியை மையமாகக் கொண்டது. ‘வீரசிங்கம்’ என்ற கேரக்டரை பற்றிய இந்தக் கதையில் லக்‌ஷன், இளங்கோ ஆகியோர் நடித்துள்ளனர். லைவ்...
உன்னி முகுந்தனின் பான் இந்தியா படமான, ‘மார்கோ’வை தயாரித்த ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அடுத்துத் தயாரிக்கும் படம் ‘கட்டாளன்’. பால் ஜார்ஜ் இயக்கும் இதில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர், மலையாளத்தில் வெற்றி பெற்ற அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு, ஆர்டிஎக்ஸ் என பல படங்களில் நடித்துள்ளார். த்ரில்லர் படமான இதன் முதல் தோற்ற போஸ்டர் வரவேற்பைப் பெற்றது. இப்போது இந்தப்...