பிரபல தயாரிப்​பாளர் ஆர்​.பி.சவுத்ரி (72) சாலை விபத்​தில் மரணமடைந்​தார். சூப்​பர் குட் பிலிம்ஸ் நிறு​வனம் சார்​பில் தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்​தி​யில் பல படங்​களைத் தயாரித்​தவர் ஆர்​.பி.சவுத்​ரி. ராஜஸ்​தானை சேர்ந்த இவர், பல படங்​களை விநி​யோகித்​தும் உள்ளார். தமிழில், 1990-களில் ஏராள​மான புதிய இயக்​குநர்​களை​யும் நடிகர், நடிகைகளை​யும் அறி​முகப்​படுத்​தி​ய​வர் இவர். விக்​ரமன் அறிமுகமான ‘புது​வசந்​தம்’, கே.எஸ்​.ரவி​கு​மார் அறி​முக​மான ‘புரியாத புதிர்’, சரத்​கு​மார் நடித்த ‘சேரன் பாண்​டியன்’, ‘நாட்டாமை’, ‘சூர்​ய...
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு செய்​யும் இப்​படத்​துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்​கிறார். ‘மாவீரன்’, ‘3 பிஹெச்​கே’ போன்ற படங்​களைத் தயாரித்த சாந்தி டாக்​கீஸ் அருண் விஸ்வா தயாரிக்​கிறார். ரொமான்​டிக் காமெடி டிரா​மா​வாக உரு​வாகி​யுள்ள இப்​படத்​தின் டைட்​டில் அறி​விப்பு வீடியோ...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 105+ தொகுதிகளை வசப்படுத்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள திமுக கூட்டணிக்கு 74 தொகுதிகளும், மூன்றாம் இடத்தில் உள்ள அதிமுக கூட்டணிக்கு 53 தொகுதிகளும் மட்டுமே வசமாகின்றன இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த்: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு...
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி  மனதை பிசைகிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெருவலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி  மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள்...
கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்​பில் உரு​வாகி​யுள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ள இதில் ஒய்​.ஜி. மகேந்​திரா, பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமி​நாதன், கவி​தாலயா கிருஷ்ணன், தீபா சங்​கர், ராஜேந்​திரன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். சமூக-அரசி​யல் பின்​னணி​யுடன் கூடிய குடும்​ப த்ரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இப்​படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ் வி தயாரித்​துள்​ளார். இப்​படம் வெளிவரு​வதற்கு முன்பே தாதா​ சாகேப் பால்கே...
‘தலை​வன் தலை​வி’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு இயக்​குநர் ‘பசங்க’ பாண்​டி​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். ஜெய​ராம், ஊர்​வசி, சந்​தோஷ் சோபன், சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி, சாண்​டி, அனந்​திகா சனில்​கு​மார் உள்பட பலர் நடித்​துள்​ளனர். யோகி​பாபு, மிஷ்கின், சிங்​கம்​புலி ஆகியோ​ரும் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் சுபாஸ்​கரன், தமிழ்க்​குமரன் புரொடக்‌ஷன்ஸ் மற்​றும் பசங்க புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்​கின்​றன. ஜார்ஜ் சி.​வில்​லி​யம்ஸ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இதன்...
சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதே சமூகப் பார்வை கொண்ட படைப்பாளியின் இலக்காக இருக்க இயலும். அதை அந்தப் படைப்பாளி அனல் பறக்கவும் சொல்லலாம் அல்லது அரவணைத்தும் சொல்லலாம். நாம் இன்னது என்று வரையறுக்க இயலாத பல உத்திகளை அறிந்தவராக இருப்பவர்தான் ஒரு சமூகப் படைப்பாளியாக தனித்து நிற்கிறார். அப்படியாக ஒரே திரைப்படத்தில் மனித மனங்களில் உள்ள வன்மமற்ற போட்டி, பொறாமைகள், உள்ளூர் கிரிக்கெட் வரை புரையோடிப்போன சாதிய வன்மம், பெண்களின் சுயமரியாதை...
திரைப்​படங்​களில் டப்​பிங் பேசும் போது எனக்கு ஏற்​பட்ட அனுபவங்​களை ஏற்​கெனவே சொல்​லி​யிருக்​கிறேன். ஆரம்​பத்​தில் எந்த வாய்ப்​பும் எளி​தாக எனக்கு கிடைத்​து​விட​வில்​லை. தங்​களை ‘ப்​ரமோட்’ பண்​ணிக்​கொள்​வதற்கு இப்​போது இருப்​பது போல, அலைபேசி​யோ, ட்விட்​டர், பேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராம் போன்ற சமூக வலை​தளங்​களோ அப்​போது இல்​லை. ஒவ்​வொரு தயாரிப்பு நிர்​வாகி​யாக போய் பார்க்க வேண்​டும், இயக்​குநர்​களைச் சந்​திக்க வேண்​டும், டப்​பிங் ரைட்​டர்​களைப் பார்க்க வேண்​டும், நேரடிப் படங்​கள் என்​றால் அசோசி​யேட், அசிஸ்​டென்ட் இயக்​குநர்​கள் என...
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் மறு ஆய்வுக்காக தணிக்கை வாரியத்திடம் நிலுவையில் உள்ளது. இப்படம் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இணைய தளங்களில் சட்டவிரோதமாக வெளியானது. இது தொடர்பாக சென்னை சைபர் க்ரைம் போலீஸார் 9 பேரை கைது செய்துள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்தால், மே 7-ம் தேதி இப்படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை...
‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். ‘லியோ 2’ குறித்து ரத்னகுமார், “அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படம் தொடங்கப்பட்டாலும் ‘கைதி 2’...