தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு மிகவும் பரிச்சியமானவர்கள். இதில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான கதை உருவாக்கும் படலத்தில் மும்முரமாக இருக்கிறார் தனுஷ்.
தனுஷ் இயக்கத்தில் அவரது மகன் யாத்ரா அறிமுகமாக இருக்கிறாரா அல்லது...
சோனியா அகர்வால், கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜோவிட்டா, அயலி மதன், அமுதவாணன், ஆதர்ஷ் ஆகியோர் நடிக்கும் படம், ‘டார்க் ஜெயின்ட்’. இதில் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கே.எஸ்.கிஷன் இயக்கும் இப்படத்துக்கு விக்னேஷ் ராஜா இசையமைக்கிறார். சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர், லோகேஸ்வரன், பயோவன் கிரியேஷனிசம் சார்பில் தயாரிக்கிறார்.
ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகும் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்திலும், சென்னையிலும் முடிவடைந்துள்ளது....
‘ஜோ’, ‘கோழிப்பண்னை செல்லதுரை’ திரைப்படங்கள் மூலம் பிரபலமான ஏகன், அடுத்து நடிக்கும் படம் ‘ஹைக்கூ’. இதை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து, மேத்யூ அருளானந்து தயாரிக்கின்றனர்.
தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி, மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் முதல் தோற்றம் டிசம்பரில் வெளியானது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு இடுக்கியில் தொடங்கியுள்ளது. இயக்குநர் ராம், கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்....
ராஜ்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘கர’ படத்தினை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை வுண்டர்பார் ஸ்டூடியோஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இதன் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இப்படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘பராசக்தி’...
தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார் விமர்சனம் செய்திருக்கிறார்.
2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2017-ம் ஆண்டிற்கு ’அறம்’ சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை இப்படத்தின் இயக்குநர் கோபி நயினார் விமர்சனம் செய்திருக்கிறார்.
இது தொடர்பாக கோபி நயினார் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு அரசு...
ராஜுமுருகன் - சசிகுமார் இணைப்பில் உருவாகியுள்ள ‘மை லார்ட்’ திரைப்படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகவுள்ளது.
ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மை லார்ட்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. தற்போது பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தில் சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ்,...
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம், ‘ஜெயிலர்’. இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு உள்பட பலர் நடித்தனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் வசூல் குவித்தது. அனிருத் இசை அமைத்திருந்தார். இந்நிலையில் இதில் ஹூக்கும் என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடலில் லிரிக்கல் வீடியோ யூடியூப்பில் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இப்போது இப்பாடல், 20 கோடி பார்வைகளைக் கடந்து சாதித்துள்ளது. சூப்பர் சுப்பு எழுதிய இப்பாடலை அனிருத் பாடியிருந்தார். இப்படத்தின் இரண்டாம்...
பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் பல படங்களை இயக்கி இருக்கிறார்.
தமிழில் ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு நடிகர் கமல்ஹாசன், ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரில் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் நடத்தினார். இந்நிலையில், சிங்கீதம் சீனிவாச ராவ் தனது 61-வது...
‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு பின்பே புதிய படம் இயக்கவிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் நீண்ட வருடங்களாக வெளியாகாமல் உள்ளது. பல்வேறு சமயத்தில் வெளியீடு என அறிவிக்கப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது எப்போது வெளியீடு என்பது தெரியாமல் உள்ளது. இதன் பைனான்ஸ் சிக்கலை சரி செய்ய தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனிடையே சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ‘துருவ நட்சத்திரம்’ வெளியீடு குறித்து...
“தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா? ” என்று இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த திரைப்படங்கள்,...
