’எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தவில்லை. ஏதோ ஒன்று கைகூடவில்லை என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எல்.ஐ.கே’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்கள் தொடர்ச்சியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வந்தன. ஆனால், அவரது நடிப்பில் 100...
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது.
இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியும் இதில் நடித்துள்ளார்.
2.45 நிமிடங்கள் ரன் டைம்...
பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தமிழில் அசுரன், துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், கேரளாவில் ரகசியமாகக் குதிரையேற்ற பயிற்சி பெற்றுள்ளார்.
எர்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து பைக்கில் அதிகாலையில் ஆலுவா சென்ற அவர் அங்கு ஆற்றங்கரையோர மைதானத்தில் குதிரையேற்ற பயிற்சி பெற்றுள்ளார். இதை ஜார்ஜ் டயஸ் என்ற பயிற்சியாளர் அவருக்கு ‘லாரா’ என்ற குதிரையில் இப்பயிற்சியை அளித்துள்ளார். மக்கள் கூடுவதற்கு முன் அங்குச் சென்றுவிடும் மஞ்சு வாரியர்,...
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நடிகை ரியா ஷிபு, தமிழிலும் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விக்ரமுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வும் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் விக்ரமுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ரியா ஷிபு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘சர்வம் மாயா’ படத்தில் நடித்தவர் ரியா ஷிபு....
கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கார்த்தி நடிப்பில் அடுத்த வெளியீடாக ‘சர்தார் 2’ இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்சல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு படமான ‘மேட்’ படத்தின் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தகவல்கள்...
சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘லவ் பைட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகனாக சந்தானம் நடிக்கவுள்ளார். இதனை ‘காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தின் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கவுள்ளார்.
இதில் சந்தானத்துடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழுக்க காமெடியை மையமாக வைத்து ஜாம்பி படமாக இது உருவாகிறது என்பது...
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’ உள்பட சில படங்களைத் தயாரித்துள்ளார். அடுத்து, அம்மாமுத்து சூர்யா இயக்கும் படத்தைத் தயாரிக்க இருக்கிறார்.
இதற்கிடையே அவரது தயாரிப்பு நிறுவனப் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அது தொடர்பான வாட்ஸப் மெசேஜ்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன்...
தவெக தலைவர் விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் கிடைக்காத நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சியின் ஆதரவு தவெக-வுக்கு கிடைத்துள்ளது. எனினும் இன்னும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்...
தமிழ், தெலுங்கில் முன்னணி இசை அமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள இவர், கதாநாயகனாக நடிக்கும் படம் ‘எல்லம்மா’. இதை தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பலகாம்’ என்ற படத்தை இயக்கிய வேணு எல்டண்டாடி இயக்குகிறார்.
ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்கின்றனர். இதில் பார்சி என்ற கதாபாத்திரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கிறார். .
இப்படம் தெலுங்கு, தமிழ் உள்பட 5...
நடிகை ராஷ்மிகா மந்தனா, நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ‘மைசா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட ஆக் ஷன் த்ரில்லர் படமான இதில் ராஷ்மிகாவின் தோற்றம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது....









