நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
21

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்கள் பரவின. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதனிடையே விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பதிவில், “நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர், மறைமுகமாக விஜய் கட்சியினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்த ‘கோட்’ படத்தினை இயக்கியவர் வெங்கட்பிரபு. இதில் 2026-ம் ஆண்டில் தமிழக முதல்வர் என்பதை அப்படத்தின் கார் நம்பரில் குறியீடாக வெங்கட் பிரபு வைத்திருந்தது இணையத்தில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here