தமிழ் சினிமாவில் காலம் காலமாக தாயின் தியாகம் எப்போதும் மிக உன்னதமான ஒன்றாக, புனிதமானதாகவே காட்டப்பட்டு வந்துள்ளது. தாயும் ஒரு பெண் என்பதையும், அவருக்கென்று ஒரு வாழ்க்கை, உணர்வுகள் உண்டு என்பதை பதிவு செய்த படங்கள் வெகு சொற்பம். ‘சொல்லாமலே’,  ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ போன்ற தனித்துவமான கதைக்களங்கள் மூலம் முத்திரை பதித்த சசி, தற்போது 'நூறு சாமி' மீண்டும் ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் வந்துள்ளார். கணவனை இழந்த செல்வி  (சுவாசிகா),...
பு​தி​தாக புழக்​கத்​தில் உள்ள 22 பிறமொழிச் சொற்களுக்​கான தமிழ் வார்த்​தைகளை தமிழ் வளர்ச்​சிக் கழகம் வெளியிட்டுள்​ளது. இது குறித்து தமிழ் வளர்ச்​சிக் கழகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: புதி​தாக புழக்​கத்​துக்கு வரும் ஆங்​கிலம் மற்​றும் பிறமொழிச் சொற்​களுக்கு இணை​யான தூய தமிழ்ச் சொற்​களை உரு​வாக்கி பொது ​மக்​களுக்கு வழங்​கு​வதற்​காக `சொல் புதிது' எனும் திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இதன் 14-வது கூட்​டம் சென்​னை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்​சிக் கழக தலை​வர்...
இந்திரன்ஸ், மதுபாலா நடித்துள்ள திரைப்படம் ‘சின்ன சின்ன ஆசை’. வர்ஷா வாசுதேவ் இயக்கியுள்ள இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை வெளியான இப்படம் பற்றி நடிகை மதுபாலா அளித்த பேட்டியில், “நான் நடித்த ‘ரோஜா’ பட பாடல் வரியையே இப்படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். 'சின்ன சின்ன ஆசை' என்ற தலைப்பு மீண்டும் அந்த இனிய நினைவுகளை உயிர்ப்பித்தது. அதே நேரம் இது தனித்துவமான கதையுடன் உருவான உணர்வுபூர்வமான...
அர்​ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்​திரங்​களில் நடிக்கும் படம் ‘கான் சிட்​டி’. இதில் யோகி​பாபு, வடிவுக்​கரசி, குழந்தை நட்​சத்​திரம் அகிலன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். பவர் ஹவுஸ் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இப்​படத்தை அறி​முக இயக்​குநர் ஹரிஷ் துரை​ராஜ் எழுதி இயக்​கு​கிறார். ஷான் ரோல்​டன் இசை அமைத்​துள்​ளார். இதன் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர். நடிகை அன்னா பென் பேசும்போது, “இது எனது 2-வது தமிழ் திரைப்​படம்....
கீர்த்தி சுரேஷ், இயக்குநர்-நடிகர் மிஷ்கின் இணைந்து நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ வரும் ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. புதுமுக இயக்குனர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் இளம் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார். ஒரு முக்கிய வழக்கில் தவறான நபர்களுக்கு ஆதரவாக செயல்படும் தனது சீனியர் மிஷ்கினை, கீர்த்தி சுரேஷ் சட்ட ரீதியாக எப்படி எதிர்கொள்கிறார் என்பதை...
இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘லவ்வர் பாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், பிக் பாஸ் ராஜு ஜெயமோகன்,அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் சினிமா தயாரிப்பு குறித்து படித்துவிட்டு, டெல்லியில் உள்ள தேசிய நாடக பள்ளியில் நடிப்புப் பயிற்சி பெற்ற...
இந்​திரன்​ஸ், மது​பாலா, அபர்ணா பால​முரளி நடிப்​பில் உரு​வாகி இருக்​கும் திரைப்​படம்​ ’சின்ன சின்ன ஆசை’. தம்பி ராமை​யா, காளி வெங்​கட் முக்கிய​மான வேடங்​களில் நடித்​துள்​ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்​துள்ள இப்​படம் தமிழ், மலையாளம், தெலுங்​கு, கன்னட மொழிகளில் ஜூன் 19-ல் வெளியாகிறது. பாபுஜி புரொடக் ஷன்ஸ் சார்​பில் அபிஜித் பாபுஜி தயாரித்​துள்ள இப்​படத்தை வர்ஷா வாசுதேவ் இயக்​கி​யுள்​ளார். தமிழில் ஏஜிஎஸ் சினி​மாஸ் வெளி​யிடு​கிறது. “காசி நகரில் எதிர்​பாராதவித​மாகச் சந்​திக்​கும் ஓர் ஆணுக்​கும் பெண்​ணுக்​கும்...
தமிழ் சினி​மா​வின் வரலாற்றை பார​தி​ராஜாவுக்கு முன், பார​தி​ராஜாவுக்​குப் பின் என்று பிரித்​துப் பார்க்​கலாம். அவர் புதிய கதைகளைச் சொன்ன இயக்​குநர் மட்​டுமல்ல; தமிழ் சினி​மா​வின் காட்சி மொழியையே (Visual Language) மாற்​றிய​வர். அவரது வருகை கதை​யிலும், கதா​பாத்​திரங்​களி​லும் மட்​டுமல்​லாமல், கேமரா எங்கு நிற்க வேண்​டும், எதைப் பார்க்க வேண்​டும், ஒளியை எவ ​வாறு பயன்​படுத்த வேண்​டும், இயற்​கையை எப்​படிக் கதை சொல்​லலின் ஒரு பகு​தி​யாக மாற்ற வேண்​டும் என்​ப​தி​லும் மாபெரும்...
சனந்த், மடோனா செபாஸ்​டியன், இமயா நடித்துள்ள படம் ‘ஹார்ட்டின்’. ரொமான்​டிக் காமெடி படமான இதை அறி​முக இயக்குநர் கிஷோர் குமார் இயக்​கி​யுள்​ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்​.ர​வீந்​திரன், ஸ்டெப் ஒன் ஸ்டூடியோஸ் தயாரிக்​கும் இந்​தப் படத்​துக்கு முகேஸ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ராஜேஷ் முரு​கேசன் இசையமைத்​துள்​ளார். ஜூன் 26-ல் வெளியாகும் இப்​படத்​தின் இசை மற்​றும் முன்​னோட்ட வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்​குநர் கிஷோர் குமார் பேசும்​போது, “இந்​தப் படத்​தில் 2 வெவ்வேறு உலகங்​களைக்...
சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இதில், சுஹாஸ், மஹிமா நம்பியார் , சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக் ஷன் ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. கடலின் பிரமாண்டமான...