குமரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.
நாகர்கோவில் மணிமேடை பகுதியில் வடசேரி போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) என்பதும், குமரியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. திருச்சி போலீசாரால் தேடப்பட்டு வந்த இவர், சிகிச்சைக்காக...
குளச்சல்: பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் கைது
குளச்சலில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் ஜவகர் (55) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் ஜவகரை...
பாலப்பள்ளம்: ஐஆர்இஎல் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்
மணவாளக்குறிச்சியில் உள்ள ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட கடமாங்குழி சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் நேற்று, 6-ம் தேதி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஐஆர்இஎல் துணை பொது மேலாளர் சிவராஜ் முன்னிலையில், கடமாங்குழி சேகர போதகர்...
சேனம்விளை: அரசு மருத்துவமனைக்கு வாஷிங் மெஷின் வழங்கிய எம்எல்ஏ
நெய்யூர் அருகே சேனம்விளையில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் நேற்று பிரின்ஸ் எம்எல்ஏ வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். நோயாளிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தபோது, உள்நோயாளிகள் பயன்பாட்டிற்கான துணிகளைத் துவைக்க வாஷிங் மெஷின் இல்லை என்பதை அறிந்தார். உடனடியாக, எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து புதிய...
குமரி: மருத்துவமனை ஊழியர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
குமரி மாவட்டம் வள்ளியூரில், தங்க லட்சுமி (70) என்ற மூதாட்டியிடம் மருத்துவமனை ஊழியர் போல் நடித்து ஒருவர் ஒன்றரை பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகனைப் பார்க்க வந்த தங்க லட்சுமியிடம், அடையாள அட்டை கிடைத்தால்...
நித்திரவிளை: மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
பைங்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயது அஜிஸ், நண்பருடன் பைக்கில் சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு மின்கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...
கிள்ளியூர்: அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் திறப்பு
கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட வட்டக்கோட்டை பகுதியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ. 14.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம், நேற்று (6-ம் தேதி) குழந்தைகள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ-வால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆல்பர்ட் ஜெனில் மற்றும்...
மீனாட்சி கார்டன் பகுதியில் கழிவு நீர் ஓடை அமைக்கும் பணி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 25-வது வார்டில் உள்ள மீனாட்சி கார்டன் மேற்கு தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் ஓடை பணி இன்று தொடங்கப்பட்டது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர் காந்தி இந்த பணியை தொடங்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர் அக்ஷயா...
நாகர்கோவில்: கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கடன் தொல்லையால் மனமுடைந்த தொழிலாளி ஞான சுபின் (24) வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பழ வியாபாரி ஞான ராஜனின் மகனான இவர், பலரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் இந்த துயர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடசேரி...
திங்கள்சந்தை: சாலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
திங்கள்சந்தையில் காமராஜ் பஸ் நிலையம் அருகே, கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பால் சாலை பழுதடைந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்தது. இதனைக் கண்டித்து, திங்கள்நகர் பாரதிய ஜனதா பேரூராட்சி கவுன்சிலர் ஜெயசேகரன் தலைமையில், பழுதடைந்த சாலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி...













