நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய கொடியேற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்றான கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தின் 1-ம் திருவிழாவான கொடியேற்று நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 24) கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான இந்து...
ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை அருகே இளைஞர்கள் ரகளை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நேற்று(நவம்பர் 24) இரவு இளைஞர்கள் சிலர் போதையில் அங்கிருந்த பைக்கை அடித்து உடைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இளைஞர்களை பிடிக்க முயன்ற போது தப்பி சென்றனர். இருவரை மடக்கி பிடித்து புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட...
தலக்குளம்: போலீஸ் அக்கா விழிப்புணர்வு நிகழ்ச்சி
தலக்குளம் பி. எஸ் நியூரோ சென்டரில் உள்ள பி. எஸ் நர்சிங் கல்லூரியில் "போலீஸ் அக்கா" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பி. எஸ் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இரணியல் சப். இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் கலந்து கொண்டு...
குளச்சல்: கடலில் நீர்மூழ்கி கப்பல் மோதி மீனவர் மாயம்
குளச்சல் அருகே உள்ள கொட்டில் பாடு பகுதியை சேர்ந்தவர் ஜெர்மியாஸ் மகன் ஜெனிஸ் மோன் (29) கேரளாவில் விசைப்படகில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17ஆம் தேதி ஜெனிஸ் மோன் கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து எர்ணாகுளத்தை சேர்ந்த...
கொல்லங்கோடு: திமுக சார்பில் பனை விதை நடும் விழா
குமரி மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் கொல்லங்கோடு நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கொல்லங்கோடு நகர செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வழங்கினார். மாவட்ட உதவி வனத்துறை...
ராஜாக்கமங்கலம்: கணவர் கண்முன் மனைவிக்கு பிளையிங் கிஸ் -கைது
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதி சேர்ந்தவர் லட்சுமணன் (48). தொழிலாளி. இவர் தெக்குறிச்சி பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் ஒருவரின் மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ தினம் அந்தப் பகுதிக்கு சென்ற லட்சுமணன், கண்டக்டர் வீட்டில் இருக்கும்போதே அவரது மனைவியை பார்த்து ஐ...
மேல்புறம்: ஒன்றிய சமய வகுப்பு மாணவர் மாநாடு
கன்னியாகுமரியில் ஹிந்து தர்ம வித்தியா பீடம் சார்பில் மேல்புறம் ஒன்றிய சமய வகுப்பு 1 மாணவர் மாநாடும், ஊர்வலமும் நடைபெற்றது. காலை ஆலுவிளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோயிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் மேல்புறம் சந்திப்பு வழியாக ஈஸ்வர கால பூதத்தான் கோயில் சென்றடைந்தது.
தொடர்ந்து மாநாடு, கலை...
தேங்காப்பட்டணம்: பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை.. போக்சோ வழக்கு
தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம்(நவம்பர் 23) இரவில் மாணவர் தேங்காபட்டணம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு...
பிடி ஆணையை நிறைவேற்ற தீவிரம் காட்ட வேண்டும்: குமரி எஸ்.பி
கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட எஸ். பி சுந்தரவதனம் தலைமையில், நாகர்கோவிலில் நேற்று (நவம்பர் 22) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எஸ். பி சுந்தரவதனம், போக்சோ புகார்களுக்கு தாமதமின்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை உறுதி...
குமரியில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ்
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (நவம்பர் 22) எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு எஸ்பி சுந்தரவதனம் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.












