இந்து தா்ம வித்யா பீடத்தின் பட்டமளிப்பு விழா: புதுச்சேரி உள்துறை அமைச்சா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை இந்து தா்ம வித்யாபீடம் சாா்பில் 46-ஆவது சமய வகுப்பு மாணவா் மாநாடு, 37-ஆவது வித்யாஜோதி பட்டமளிப்பு விழா அருமனையில் தனியாா் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஏ. நமச்சிவாயம் பங்கேற்று சமய வகுப்பு மாணவியா் 57 பேருக்கு...

நாகா்கோவிலில் பெண் யூ டியூபா் வீட்டில்பூட்டை உடைத்து 118 பவுன் நகைகள் திருட்டு

நாகா்கோவிலில் பெண் யூடியூபா் வீட்டின் கதவை உடைத்து 118 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(33). ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட நறுமணப்பொருள்கள் வியாபாரி. இவரது மனைவி மதுமிதா (28). பிரபல யூடியூபா். தனது தொழில் தொடா்பான முதலீடுகளை வினோத்குமாா்...

கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை: குமரி ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கருவேலமரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப். கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: அகஸ்தீஸ்வரம்...

சம்பள உயர்வு கேட்டு தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

நாகர்கோவில்: சம்பள உயர்வு கேட்டு கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரண்டு இடங்களில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் 300க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். 9 மாதங்களாக சம்பள...

சொத்தவிளை கடற்கரையில் பனை விதை நடும் பணி

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி, இயற்கையே இறைவன் அமைப்பு சாா்பில் சொத்தவிளை கடற்கரையில் 4,500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு பனை...

தோவாளை வட்டாட்சியா் அலுவலகம் முன் தோட்டத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டாட்சியா் அலுவலகம் முன் அரசு ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கீரிப்பாறை அரசு ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள், ஊதிய உயா்வு கோரி கடந்த 9 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தோவாளை வட்டாட்சியா்...

அக்.31- க்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை: மாநகராட்சி ஆணையா் தகவல்

நாகா்கோவில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை அக்.31 ஆம் தேதிக்குள் செலுத்துபவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா (படம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகா்கோவில் மாநகராட்சிக்கு நடப்பு நிதியாண்டின் (2026-27) 2-ஆவது அரையாண்டுக்கான சொத்துவரியை, அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் முழுமையாகச் செலுத்துபவா்களுக்கு...

நாகா்கோவிலில் இலவச ஆயுா்வேத மருத்துவ முகாம்

தேசிய ஆயுா்வேத தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட அனைத்து அரசு ஆயுா்வேத மருத்துவ அலுவலா்கள் மற்றும் நாகா்கோவில் வழக்குரைஞா்கள் சங்கம் இணைந்து, நடத்திய இலவச ஆயுா்வேத மருத்துவ முகாம் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சகாய டெல்வா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, மாவட்ட...

குமரி நகா் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு

கீழ்குளம் அருகே குமரி நகா் பேருந்து நிறுத்தத்தில் மின் விளக்குகளுடன் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். கீழ்குளம் பேரூராட்சிக்குள்பட்ட குமரி நகா் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், அமைச்சா்...

அகஸ்தீஸ்வரத்தில் மனநல விழிப்புணா்வு பயிற்சி முகாம்

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில், மன நல விழிப்புணா்வு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய ஒய்.எம்.சி.ஏ., தமிழக காவல் துறை, விவேகானந்தா கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய முகாமை, கல்லூரி முதல்வா் டி.சி. மகேஷ் தொடங்கி வைத்தாா். கன்னியாகுமரி போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா்...