குமரி: 2 டன் ரேசன் அரிசியை போலீசார் காருடன் பறிமுதல்
களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் இருந்து 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, கடத்தல் காரையும், ரேசன் அரிசியையும் உணவு கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அரிசியை...
தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை திடீர் உயர்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று பூக்களின் விலை திடீரென்று உயர்ந்தது. நேற்று முன்தினம் 1250 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பிச்சிப்பூ நேற்று 2000 ரூபாயாகவும், 1100 ரூபாயாக இருந்த முல்லைப் பூ 1900 ரூபாயாகவும், 450 ரூபாயாக இருந்த மல்லி 150 ரூபாய்...
பைங்குளம்: ஊராட்சி பணியாளர்கள் வாக்குப்பதிவு பைக் பேரணி
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள 11 ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வை வலியுறுத்தி பைக் பேரணி இன்று 30-ம் தேதி கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து துவங்கியது. மாவட்ட கலெக்டர் அழகுமீனா கொடியசைத்து பேரணியை...
குமரி: பச்சிளங் குழந்தை கொலை.. நர்சிங் மாணவி, காதலன் கைது
குமரி மாவட்டம் பொற்றையடி பகுதியில் முட்புதரில் பிறந்து சில மணி நேரமான பச்சிளங் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. தென்தாமரைகுளம் போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ரெஜினா (20) மற்றும் அவரது காதலன் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும்...
இட்டகவேலி: ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவிலில் கமுகுமர விழா
குமரி மாவட்டம் இட்டகவேலி பகுதியில் உள்ள நிலகேசி அம்மன் கோவிலின் வருடாந்திர விழாவில், மாமியார் கொடுமையை வென்றதாகக் கருதும் ஒரு சிறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், ஒரு கமுகு மரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதன் உச்சியில் தீயேற்றி, மாமியார் கொடுமையை வென்றதாக பக்தர்கள் நம்பினர்....
குமரி: சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய தம்பதி மீது வழக்கு
நேசர்புரம் பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியான ராஜஷீலா (36) தனது கணவருக்குச் சொந்தமான சொத்தைப் பராமரிக்கச் சென்றபோது, கணவரின் உறவினர்களான ஜெயக்குமார் மற்றும் தங்கம் ஆகியோர் அவரைத் தடுத்து, திட்டி, தாக்கி, மிரட்டியுள்ளனர். இதய நோய் காரணமாக கடந்த 2020ல் ராஜஷீலாவின் கணவர் வினோ இறந்துவிட்டார். இது...
தேங்காபட்டணம்: மீனவ கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு
குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் ஏப்ரல் 23 அன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் கண்டிப்பாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துறை அலுவலர்கள் மற்றும்...
குமரி மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக்காக உழைக்க வேண்டும் – டாக்டர் சுஜின் ஜெகேஷ் வேண்டுகோள்
நாகர்கோவில், மார்ச் 30: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ், பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட், விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக கிழக்கு மாவட்ட அயலக...
எடப்பாடி பழனிசாமி வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படையினர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவிலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, ஆரல்வாய்மொழிக்கு பிரச்சார வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஒழுகீனசேரி சந்திப்பு அருகே பறக்கும் படையினர் அவரது தேர்தல் வாகனத்தை சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனை தேர்தல் விதிமுறைகளின்படி...
குளச்சல்: திடீர் தீ ; தென்னை வாழை மரங்கள் நாசம்
குளச்சல், சாஸ்தான்கரை பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவுள்ள வயல்வெளியில் விவசாயம் நடைபெறாமல், தென்னை, வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் வளர்ந்திருந்த பச்சை புற்களில் நேற்று திடீரென தீப்பிடித்ததில் தென்னை, வாழை மரங்கள் சேதமடைந்தன. குளச்சல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.













