கொல்லஞ்சி: சாலை பணியினை தடுத்து நிறுத்திய பொது மக்கள்
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொல்லஞ்சி ஊராட்சி உட்பட்ட புல்லாணி பகுதியில் குளத்தின் கரையோரம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2025-26-ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் படி ஆறு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை பணி நடந்தது. சாலை மிகவும் தரமானதாக அமைக்கப்படவில்லை.
ஆகவே அப்பகுதி...
கொல்லங்கோடு: பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் கைது
கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா புகையிலை விற்பனை செய்வதாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அந்த பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். சோதனையில் கடையிலிருந்து 18 பாக்கெட் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக...
குமரி: ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆல்பர் மதியரசு தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 125 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது....
கன்னியாகுமரி: 25 முன்னாள் படை வீரர்களுக்கு கடன் அனுமதி – ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் வீரர் நலத்துறை சார்பில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாமினை ஆட்சியர் அழகுமீனா, துவக்கி வைத்தார். அப்போது, மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள்...
இரணியல்: பைக் மோதி மூதாட்டி படுகாயம்
திங்கள் சந்தை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் டேவிட்சன் மனைவி பால் தங்கம் (68). இவர் கடைக்கு செல்வதற்காக ஆலங்கோடு - அழகிய மண்டபம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த பைக் ஒன்று...
பளுகல்: லோடு மேனை தாக்கிய காவலாளி கைது
கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி ராஜன் (51). தனியார் நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிகிறார். இவரின் தாயருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் தாயாரை பளுகல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் தாயாரின் சிகிச்சை செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், தான்...
மார்த்தாண்டம்: காரில் குட்கா கடத்தல் 3 பேர் கைது
மார்த்தாண்டம் வழியாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கடத்தி செல்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா தலைமையிலான போலீசார் விரிகோடு என்ற பகுதியில் நேற்று மாலையில் திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.
அப்போது விரைவாக வந்த சொகுசு...
நாகர்கோவில்: மதுபோதையில் மயங்கி கிடந்த பெயிண்டர் திடீர் சாவு
நாகர்கோவில் கோட்டார் கண்ணங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 51), பெயிண்டர். இவருக்கு சகிலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். வெங்கடேசன் நேற்றுமுன்தினம் இரவு பறக்கை பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்குச் சென்று மது அருந்தியதாக தெரிகிறது.
பின்னர் வெங்கடேசன் சிறிது தூரம் நடந்துசென்றபோது, திடீரென...
கோட்டாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று கம்பளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் இருந்து 150...
தக்கலை: திருமணமான கல்லூரி மாணவி மாயம்
தக்கலை போலீஸ் சரகம் பறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் பாபு. வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ரோகிணி சந்திரன் (27). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. தற்போது ரோகிணி சந்திரன் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள கல்லூரியில்...












