தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (61). இவர் நேற்று புதுக்கடை சந்திப்பு பகுதியில் சாக்குப் பையை கையில் ஏந்திய படி நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரித்த போது அதிக விலைக்கு விற்பதற்காக மதுப் பாட்டில்கள் பையில் வாங்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை காவல் நிலையம் கொண்டு சென்று சோதனையிட்ட போது, பையில் 26 மதுப் பாட்டில்கள் காணப்பட்டன. போலீசார் அவற்றைப் பறிமுதல் செய்து தேவராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.