வெள்ளிகோடு: சாலையோரம் மின்கம்பத்தில் மோதிய கார்

தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியில் இன்று அதிகாலை திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் கொண்டு செல்லப்பட்டு வந்தது. திடீரென அந்த காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பகுதியில் உள்ள சாலையோர மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த...

களியக்காவிளை: சிபிஎஸ் இயக்கம் சார்பில் வாகன பேரணி துவக்கம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சி.பி.எஸ்) ஒழிப்பு இயக்கம் சார்பில் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழகம் தழுவிய வாகன பேரணி மூன்று குழுக்களாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை, கோவை மாவட்டம் வாளையார், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உள்ளிட்ட...

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை

நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 0-18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு இதயநோய் கண்டறிதல் முகாம் நேற்று நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் ராமலெட்சுமி தொடங்கிவைத்து பேசினார். அதன்பிறகு நடந்த முகாமில் 41 குழந்தைகளுக்கு இதய பரிசோதனை செய்யப்பட்டது. இதய நோய்களான அறிகுறிகள் உள்ள குழந்தைகளும் அழைத்து...

குமரி எஸ். பிக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் முயற்சியில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் பொது மக்களுடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து நேசமணி நகர் காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்ட கிறிஸ்து நகர், ஜோதி தெரு ஆகிய பகுதிகளில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் குறித்து...

குமரி: பெண் கவுன்சிலர் குறித்து அவதூறு; 3 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பராசக்தி கார்டனை சேர்ந்தவர் ஸ்ரீலிஜா இவர் 11-வது வார்டு கவுன்சிலராகவும், அ. தி. மு. க. வடக்கு மண்டல செயலாளராகவும் உள்ளார். ஸ்ரீலிஜா வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், 'எனது நற்பெயருக்கு தீங்குவிளைவிக்கும் வகையில் ஈஸ்வரி...

நாகர்கோவிலில் ஆளுநரை வரவேற்ற வருவாய் அலுவலர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாலையில் கூட்டாளி மூடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர்...

குளச்சல்: வீட்டுக் கூரையிலிருந்து விழுந்து பிளம்பர் பலி

குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயின் ஐசக். இவர் கடந்த 18ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிளம்பிங் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது சன் ஷேடில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே தவறிவிழுந்தார். இதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டு உடனடியாக குளச்சல்...

களியக்காவிளை: வேலை வாங்கி தருவதாக மோசடி 2 பேர் மீது வழக்கு

களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: - கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஜெபாஸ்டின் (48) மற்றும் தேரேகால்புதூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (37) ஆகியோர் நண்பர்கள் மூலம் அறிமுகமாகி...

கிள்ளியூர்: தாலுகா நீதிமன்றம் அமைக்க அனைத்து கட்சி கூட்டம்

கிள்ளியூர் தாலுகாவில் நீதிமன்றம் அமைக்க ராஜேஷ்குமார் எம்எல்ஏ சட்டசபையில் கோரிக்கை வைத்தார் அடிப்படையில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது தற்காலிக நீதிமன்றம் கருங்கல் அருகே உள்ள பாலபள்ளம் பகுதியில் அமைக்க ஆய்வு செய்தனர். நிரந்தர நீதிமன்றம் கருங்கல் சுற்றுவட்டார...

வெள்ளிமலை: பள்ளி கட்டிட திறப்பு.. தமிழக கவர்னர் பேச்சு

வெள்ளிமலை அருள்மிகு பாலமுருகன் கல்வி மற்றும் சேவா அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் காஞ்சி ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி புதிய கட்டட திறப்பு விழா இன்று மாலை நடந்தது. பள்ளித் தாளாளர் ராஜரெத்தினம் வரவேற்றார். வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆஸ்ரமத் தலைவர் சைதன்யானந்த மகராஜ் ஆசிரியுரை வழங்கினார். பள்ளி...