தக்கலை: மாணவிகளை கடத்திச் சீரழித்த வழக்கறிஞருக்கு போக்சோ

0
108

தக்கலை அருகே சகோதரிகளான பள்ளி மாணவிகள் கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமானார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசாரின் தேடுதலுக்குப் பின் அதிரடியாக மாணவிகள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர். மாணவிகளை கடத்திச் சென்ற வழக்கறிஞர் அஜித் குமார் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. 

இவருடைய தகப்பனார் A.P. ராஜன் வழக்கறிஞராகவும் சிவசேனா கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். சம்பவத்தன்று இரவு தக்கலை பகுதியில் சைக்கிளில் சுற்றித் திரிந்த மாணவிகளை மிரட்டி பைக்கில் கடத்தி அலுவலகத்தில் அடைத்து வைத்து சிதைத்ததாக கூறப்படுகிறது. வழக்கறிஞரான அஜித் குமாரை தக்கலை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறுமிகளை மீட்டுள்ளனர். நேற்று (மார்ச் 16) அஜித்குமாருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதால் திருமணம் நின்றுபோனதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here