இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற நையாண்டி இயக்கம், தற்போது எல்லை கடந்து பாகிஸ்தான் சமூக ஊடகங்களிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
கடந்த மே 16 அன்று இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்த இணைய வழி இயக்கம், ஒரே வாரத்திற்குள் பாகிஸ்தான் இளைஞர்கள் மத்தியிலும் புதிய அரசியல் டிரெண்டாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின்...
“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்” – ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு
admin - 0
நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான் என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி விமர்சித்துள்ளார்.
ஆயுத மோதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் என்ற பொருளில் ஐநா பாதுகாப்பு சபையில் திறந்த விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பார்வதனேனி, “நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட களங்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான். அப்படிப்பட்ட ஒரு...
ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதேநேரத்தில் உலக அளவில் தொற்று குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயெசஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், “காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை...
“அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதை ஈரான் தீவிரமாக விரும்புவதால், மிக விரைவாக நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் டி.சி.-யில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள். எனவே, நாங்கள் இந்தப் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிடும் நிலைக்கு நெருக்கமாக நான் இருந்தேன். நான் ஒரு...
இந்தியா - இத்தாலி இருதரப்பு உறவை சிறப்பு உத்திசார் கூட்டாண்மை (Special Strategic Partnership) நிலைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழு, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான குழுவினரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடியும், பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியா -...
“ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு, “அவர் நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது" என்று பதிலளித்தார்.
மேலும் நெதன்யாகு இஸ்ரேலில் சரியாக நடத்தப்படவில்லை...
இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலாகி உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இறுதியாக செவ்வாய்க்கிழமை மாலை ரோம் நகர் சென்றடைந்தார். அங்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். இருவரும் இணைந்து இரவு உணவு சாப்பிட்டனர். அதைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கொலோசியம்...
இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா வழித்தட கனவு நனவாகும்: பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தகவல்
admin - 0
பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இத்தாலி தலைநகர் ரோமுக்கு சென்றார். இதையொட்டி பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளிலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க வழிவகுக்கிறது.
இரு நாடுகள் இடையே பாதுகாப்பு மற்றும் விண்வெளி, தூய்மையான தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள்,...
“எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப். ஈரான் அரசுக்கு எதிரான தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஈரானின் அதிதீவிரவாதத் தலைமை ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற அமெரிக்கா அனுமதிக்காது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், "இந்த நடவடிக்கை...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது முதலீட்டு ஆலோசகர்கள் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தக பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். இதில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்த பங்கு வர்த்தகத்தை அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப, நிதி, ஏரோஸ்பேஸ் மற்றும் ஊடக நிறுவனத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த விவரத்தை முன்னணி செய்தி...










